தாதா கண்ணில் காந்தி!
காந்தியை எல்லோரும் மறந்துவிட்ட வேளையில், இந்திப் படம் 'லகே ரஹோ முன்னாபாய்' மறுபடியும் அவரைப் புதிய தலை முறையின் ஹீரோவாக முன்னிறுத்தி இருக்கிறது என்று ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. இது போல, சினிமாவால் ஒரு சமூகத்தில் நல்ல மாற்றங்கள் வர முடியுமா என்ன?'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்' படத்தைவிட இது இன்னும் பெரிய ஹிட் என்பது உண்மை. மும்பை தியேட்டர்களில் படம் முடிந்ததும் ஆடியன்ஸ் மொத்தப் பேரும் எழுந்து நின்று கை தட்டியதை நேரில் பார்த்தபோது கமர்ஷியல் சினிமாவுக்குள் நுழையத் தயங்கும் எனக்கே, இதை உடனே சென்னை சென்று அடுத்த வாரமே தமிழில் தயாரித்து இயக்கி வெளியிட்டுவிட வேண்டுமென்று பரபரப்பு ஏற்பட்டது (ரீ--மேக் உரிமை விலை 6 கோடியாம்).எளிமையான கதை. ஆனால், மிகவும் புத்திசாலித்தனமாகவும் சுவாரஸ்யமாகவும் அமைக்கப்பட்ட திரைக்கதை. பண்பலை வாயாடியான (எஃப்.எம். ரேடியோ ஜாக்கிக்கு தமிழ்!) ஹீரோயினை (வித்யாபாலன்) கவர்வதற்காக, அவள் நடத்தும் காந்தி பற்றிய லைவ் க்விஸ் நிகழ்ச்சியில், சரியாகப் பதில்கள் சொல்ல தாதா முன்னாபாய் தன் அதிரடி வழிகளில் முயற்சிக்கிறான். ஜெயிக்கிறான். காதலுக்காக காந்தியில் காட்டிய ஆர்வம், அவனை காந்தியவாதியாகவே ஆக்கிவிடுகிறது.இன்றைய நடைமுறை பிரச்னைகளுக்கெல்லாம் எப்படி காந்தியைப் பின்பற்றலாம் என்று ரேடியோவில் யோசனைகள் சொல்கிறான். (பென்ஷன் பேப்பரில் கையெழுத்திட லஞ்சம் கேட்கும் அதிகாரியிடம், ஒரு முதியவர் தன் ஜட்டி தவிர, எல்லா உடைகளையும் அவிழ்த்துக் கொடுத்துவிடுகிறார். வீட்டுச் சுவரில் தினசரி வெற்றிலை எச்சில் துப்பும் மாடி வீட்டுக்காரரிடம் சண்டை போடாமல், தினமும் அவர் துப்பியதும் சுவரைக் கழுவிவிடும் காந்தியம், எச்சில் பார்ட்டியை வெட்கப்படுத்தித் திருந்த வைக்கிறது.) ஹீரோவின் காந்திய யோசனைகள் எல்லாம் ஒர்க் அவுட் ஆகின்றன. கடைசியில் காதலியை மட்டுமல்ல, வில்லனையும் காந்திய வழியில் ஜெயிக்கிறான்.இந்தக் கதையில் ஹீரோ சஞ்சய் தத்தும், அவரது அடியாளாக வரும் அர்ஷத் வார்சியும் நடிப்பில் கலக்குகிறார்கள். படத்தின் ஹை லைட்... ஹீரோவை அசல் காந்தி வந்து அடிக்கடி சந்தித்து யோசனைகள் சொல்வதுதான்! அவன் கண்ணுக்கு மட்டும் காந்தி தெரிகிறார். எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட்டால், ரொம்ப நல்லது என்பதுதான் படத்தின் மெஸேஜ். இந்த சீரியஸான மெஸேஜை காமெடியாகச் சொல்லியிருப்பது ஆடியன்சுக்குப் பிடித்து விட்டது.பல ஆங்கிலப் பத்திரிகைகள், மும்பையின் அன்றாடச் சிக்கல்களுக்கு எப்படி காந்தி வழியை முன்னாபாய் ஸ்டைலில் பின்பற்றலாம் என்று வாசகர்களுக்குப் போட்டிகள் வைத்திருக்கின்றன. ஆட்டோ சிக்கல் முதல் ஆபீஸில் லஞ்சம் வரை வாசகர்கள் பல காந்தியத் தீர்வுகளை எழுதி அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். மும்பைப் பேச்சு மொழியில் இருக்கும் இந்தப் படம், மும்பைவாசிகளுக்கு மிகவும் பிடித்துவிட்ட நிலையில், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் (ஆயுதம் வைத்திருந்ததாகக்) குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் சஞ்சய் தத்துக்கான அனுதாபம் அதிகரித்து வருகிறது. சஞ்சய் தத் அசலாகவே ஓர் இளகிய மனதுடைய காந்தியவாதிதான் என்று கூடப் பலரும் நம்புகிறார்கள்.இதே போல ஒரு நல்ல மெஸேஜை தெலுங்கு சினிமாவின் கார மசாலாவுடன் குழைத்துச் சொல்லியிருக்கும் ஒரு படத்தையும் அண்மையில் பார்த்தேன். சிரஞ்சீவி நடித்திருக்கும் 'ஸ்டாலின்'. தமிழ்நாட்டு ஏ.ஆர் முருகதாஸ் படைப்பு. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் எம்.எல். எம். ஐடியாவை சமூக அக்கறையுள்ள விஷயத்துக்குப் பொருத்திப் பார்த்திருக்கிறார்.ஸ்டாலின், எல்லா சக மனிதர்களுக்கும் நெருக்கடியான நேரத்தில் உதவி செய்யும் சுபாவம் உள்ளவன். உதவி பெற்றவர் 'தேங்க்ஸ்' சொன்னதும், 'தேங்க்ஸ் சொல்லாதே! நெருக்கடியான சூழலில் இருக்கும் மூன்று பேருக்கு உதவி செய். இதே யோசனையை அவர்களுக்கும் சொல்லி அனுப்பு!' என்கிறான்.ஒவ்வொருத்தரும் தலா மூன்று பேருக்கு... அந்த மூவரும் தலா மூன்று பேர் வீதம் ஒன்பது பேருக்கு என இந்த உதவி செய்யும் கலாசாரம் பெருகி, முழு சமூகத்தையும் அரவணைத்து விட்டால் எவ்வளவு நல்லது என்பது ஒரு சுகமான கனவு! அதைத் தெலுங்கு ஸ்டைல் அடிதடி, குலுக்கல் ஆட்டங்களுடன் சொல்லியிருப்பது மசாலா ஆடியன்சுக்கு நிறைவாகிவிட்டது.இந்தப் பாணி படங்கள் பெரும் வெற்றி அடைவதற்கு அடிப்படையான காரணம், நம் சமூகத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் மக்களைக் கைவிட்டு விட்டதுதான். எனவே, வேறு ஏதாவது ஒரு அதிசயம் நடந்துவிடாதா என்று ஏங்கிக் கிடக்கும் மனங்களுக்கு இவை ஆறுதலாக இருக்கின்றன.சுமார் 30 வருடங்கள் முன்பு இந்தியில் வெளியான 'சத்யகாம்' (தமிழில் 'புன்னகை') படத்திலும், ஹீரோ காந்தியவாதிதான். எந்த நிலையிலும் உண்மை தான் பேசுவேன், நேர்மையாகவே இருப்பேன் என்று சொல்லும் அந்த ஹீரோ, படம் முழுக்க அடுக்கடுக்கான கஷ்டங்களையே அனுபவிப்பான். ஆனால், முன்னாபாய்-2 நம் அன்றாடக் கஷ்டங்களை எல்லாம் காந்தி வழியில் தீர்க்கலாம் என்று காட்டுகிறான். கஷ்டப்படுகிற ஹீரோவை யார் ரோல் மாடலாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள்? 'அதெல்லாம் காந்திக்கு தான் முடியும். நமக்கு முடியாது' என்கிற சராசரி ரியாக்ஷனைத் தலைகீழாகப் புரட்டியிருக்கிறார் முன்னாபாயின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி.சஞ்சய் தத் - அர்ஷத் ஜோடி போல தமிழில் முன்னாபாய்-2 செய்ய யார் இருக்கிறார்கள்? மறுபடியும் கமல்-பிரபு? அல்லது, ரஜினி-வடிவேலு? விஜய்-விவேக்? அஜீத்-ரமேஷ்கண்ணா? ம்ஹூம்! என் சாய்ஸ்... ஸாரி, நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் மட்டுமே சொல்லு என்கிறார் என் அருகே உட்கார்ந்திருக்கும் காந்தி!இந்த வார புதிர்:மனித வரலாற்றில் ஒரு சிலர் மிகப் பலரை அடிமைகளாக வைத்திருந்த அத்தியாயங்கள் நெஞ்சைப் பிழியக்கூடியவை. தங்கள் அடிமைக் கூலியாட்களைத் தண்டிக்க அவர்கள் வீட்டுப் பெண்களைச் சித்ரவதை செய்யும் பழக்கம், குறிப்பாக, கிட்டி எனப்படும் இரும்புக் கிடுக்கியால் பெண்ணின் மார்பகங்களை ரத்தம் வரும் விதத்தில் கசக்கிப் பிழியும் கொடும் பழக்கங்கள் இருந்தது எந்தச் சமூகத்தில் தெரியுமா?1. கிரேக்கம்2. எகிப்து3. ரோமாபுரிவிடையை எளிதில் யூகிக்கவே முடியாது. மேற்கண்ட கொடுமை நிகழ்ந்தது தமிழ்ச் சமூகத்தில், தஞ்சைப் பகுதியில்தான். விலைக்கு அடிமைகளை வாங்குவதும் விற்பதும் பழந்தமிழகத்திலும் இருந்தது என்ற தகவல்கள் நமதுபள்ளிக்கூட சரித்திரப் புத்தகங்களில் சொல்லப்படுவது இல்லை. இது பற்றி கல்வெட்டு, இலக்கிய ஆதாரங்களுடன் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அண்மையில் எழுதியிருக்கும் 'தமிழகத்தில் அடிமை முறை' என்ற நூல் ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய ஒன்று.(ஆனந்தவிகடன் 8-10-2006)
Sonntag, 17. Dezember 2006
வரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்: அ.ராமசாமி
வரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்
சில பொதுக்குறிப்புகள்:சாதாரண நிகழ்வுகளுக்கும், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை வரையறை செய்வது பல நேரங்களில் சிக்கலான ஒன்று. புதிய சிந்தனைகள் அல்லது சோதனை முயற்சிகள் எதுவும் இல்லாமலேயே ஒரு சில சாதாரண நிகழ்வுகள் கவனிக்கத்தக்க நிகழ்வுகளாக ஆகி விடுவதுண்டு. இதன் மறுதலையாக விவாதிக்கத்தக்க சிந்தனைகளையும் புதுப்புது பரிசோதனைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் கவனிக்கப்படாமலும் விவாதிக்கப்படாமலும் போவதுமுண்டு. மனித வாழ்க்கை சார்ந்த எல்லாவற்றிலும் இந்த அம்சம் பொதுத்தன்மையாக இருக்கிறது. கண்டு கொள்ளப்படுவதிலும், கவனிக்கப்படாமல் போவதிலும் வினையாற்றும் பொது அம்சங்கள் இவைதான் எனச் சொல்லி விடுவதும் விளக்கிக் காட்டுவதும் கூடத் தற்காலிகமானவைகள் தான்.இப்பொதுக் குறிப்புக்குச் சமீபத்திய உதாரணம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற சினிமாவின் வெற்றி. அப்படம் கவனிக்கத்தக்க படமாகவும் வசூலில் வெற்றி பெற்ற படமாகவும் ஆகி இருப்பதில் விவாதிக்கத் தக்க அம்சங்கள் பல உள்ளன. பாடல்களாகவும் காட்சித் துணுக்குகளாகவும் ஒரு படத்தின் பகுதிகள் சின்னத்திரையில் காட்டப்பட்ட பின்னால் அப்படத்தைக் காண வேண்டும் என்ற ஆர்வம் கூடும் என்பதும், அப்படத்தை முழுமையாகக் கண்டுகளிக்கப் பார்வையாளத் திரள் திரையரங்கை நோக்கி இழுக்கப்படும் என்பதும் விளம்பரங்கள் சார்ந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். ஆனால் தமிழ்த் திரைப்படங்களின் விளம்பரங்களும் முன்னோட்டத் துணுக்குகளும் இதற்கு மாறாகவே இருந்து வருகின்றன. பல படங்களின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு பார்க்க வேண்டிய படம் அல்ல என்றே பார்வையாளர்கள் முடிவு செய்கின்றனர். இம்சை அரசன் இந்த மனநிலையிலேயே மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டது. விளம்பரங்களாகவும் விமர்சனக் குறிப்புக்களாகவும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் காண்பிக்கப்படும் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் காட்சிகளும், துணுக்குகளும் அரங்கிற்குச் சென்று பார்க்க வேண்டிய படம் என்று தீர்மானிக்கச் செய்கின்றன.திரை அரங்கிற்குச் சென்று சினிமா பார்ப்பது என்ற வினையில் தனி நபர்களின் பொழுதுபோக்கு ஈடுபாடும் கலை ஆர்வமும் செயல்படுகிறது என்பது மேற்கத்திய மனோபாவம். ஆனால் இந்தியா போன்ற கீழ்த் திசை நாடுகளில் திரை அரங்கிற்குச் செல்வது பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒரு சமூகச் செயல்பாடு தான். நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் இந்த அம்சம் கூடுதலாக வெளிப்பட்டதைச் சொல்ல முடியும். தனியாக ஒருவர் சினிமாவுக்குச் செல்வது அரிதான ஒன்று. நண்பர்களாக - உறவினர்களாகவே தமிழர்கள் சினிமாவைப் பார்த்து வந்தனர். புதுப்பட வெளியீடுகள் பெரும்பாலும் விழா நாட்களில் இருந்ததற்கான சமூகக்காரணம் கூட்டமாகச் சினிமாவிற்கு வருவார்கள் என்பதுதான். நகரங்களிலும் கூடக் குடும்பத்தினருடன் கிளம்பிக் கோயிலுக்குப் போய்விட்டு வருவது போன்ற ஒரு சமூகச் செயல்பாடாகவே இருந்தன. வெற்றி அல்லது இழப்பு போன்ற முக்கிய நாட்களை உறவினர்களுடனும் நண்பர்களுடனும் சேர்ந்து கூட்டமாகக் கொண்டாடும் சடங்குகள் சார்ந்த சமூக நிகழ்வு. திரைப்படங்களை அரங்கிற்குச் சென்று கூட்டமாகப் பார்ப்பதில் சடங்குகளில் பங்கேற்கும் மனநிலைகள் பலவிதமாக வெளிப்படுகின்றன.கூட்டத்தின் பகுதியாகவும், கூட்டத்தின் கூறாகவும் தனிமனிதன் மாறிக் கூட்டத்தின் குணத்தை அடையும் போது அவன் இரட்டை நிலையை அடைகிறான். அவனே நிகழ்த்துபவன்; அவனே பார்வையாளன். வெகுமக்கள் திரளின் ரசாயனத்தை விளங்கிக் கொள்ளக் கிராமப்புறக் கோயில்களில் நடக்கும் பலியிடலில் அல்லது கொடையில் ஒவ்வொருவரும் பார்வையாளர்களாகவும் நிகழ்த்துபவர்களாகவும் பங்கேற்று வெளிப்படுவதை நினைவுபடுத்திக் கொண்டால் எளிமையாகப் புரியக் கூடும். திரை அரங்கிற்குச் சென்று தான் விசிறியாக இருக்கும் நாயகனின் படத்தைப் பார்க்கும் போது வெளிப்படும் ரசிகனின் வெளிப்பாடுகள் பலவற்றை கொடையில் பங்கேற்கும் பக்தனின் மனநிலையோடு சமப்படுத்திச் சொல்ல முடியும். ஒவ்வொரு கொடையிலும் சென்று பங்கேற்பதைக் கடமையாகக் கொண்ட பக்தன் மனநிலையிலிருந்து பெரிய அளவில் மாற்றம் இல்லாத மனநிலைதான் நாயக நடிகர்களின் ரசிகர்களிடம் வெளிப்படுகிறது. ஏற்கனவே வந்த படத்தைப் போன்றதொரு படத்தையே திரும்பவும் தனது மதிப்பிற்குரிய நாயகன் நடித்திருந்தாலும் அதையும் பார்க்க வேண்டியது தனது கடமை எனக் கருதுகிறான். வருடத்திற்கொரு முறையாவது தனது இஷ்ட தெய்வத்திற்குப் பலிப்பொருட்கள் வழங்குவது போல ஆறுமாத இடைவெளியில் வரும் தனது இஷ்ட நாயகனின் படத்தையும் பார்த்து வைக்கிறான். அதில் அவனுக்குத் தனது மாதிரியாகவோ வழிகாட்டியாகவோ கருதும் பிம்பத்தின் புதிய மாதிரியைப் பார்த்த மகிழ்ச்சியும், செய்ய வேண்டிய கடமையை முடித்த திருப்தியும் கிடைக்கிறது.சிறப்புக் குறிப்புகள் சில:பெரிய திரையில் படம் பார்க்கும் போது கிடைக்கும் அனுபவத்தோடு, கூட்டமாக அமர்ந்து படம் பார்க்கும் பார்வையாளர்களின் ஈடுபாட்டையும் கவனிப்பது எனது விருப்பங்களில் ஒன்று. இப்பொழுதும் நான் பார்க்க விரும்பும் படத்தை திரை அரங்கிற்குச் சென்று தான் முதல் தடவை பார்க்கிறேன். திரும்பவும் பார்க்க வேண்டும் என்றால் மட்டுமே கம்யூட்டர் வட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளவற்றைப் பார்க்கிறேன். இந்த அனுபவத்திலிருந்து பின்வரும் கருத்தைச் சொல்கிறேன்:சமீப காலங்களில் நான் சென்ற திரை அரங்குகளில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் எனக் குடும்பம் குடும்பமாக வந்து குதூகலத்துடன் பார்த்துச் செல்லும் படமாக இம்சை அரசன் இருக்கிறது. இதற்கு முன்பு இப்படிக் கலவையான கூட்டத்தைத் திரை அரங்குகளை நோக்கி இழுத்த படம் ரஜனிகாந்தின் சந்திரமுகி. சேரன் இயக்கிய ஆட்டோகிராப், லிங்குசாமியின் சண்டைக் கோழி போன்ற படங்களுக்கும் கூட கூட்டம் வந்தது; வசூலில் வெற்றியும் பெற்றன. ஆனால் அவற்றின் பார்வையாளர்கள் கலவையான பார்வையாளர்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட வகைப் பார்வையாளர்கள்தான். சந்திரமுகியும் இம்சை அரசனும் தான் எல்லாவகைப் பார்வையாளர்களையும் அரங்கை நோக்கி இழுத்து வந்த படங்கள் எனச் சொல்ல வேண்டும்.வியாபார வெற்றியை விரும்பும் திரைப்படத் தயாரிப்பு கலவையான பார்வையாளர்களை [Common Audience] குறிவைக்குமா? அல்லது குறிப்பான பார்வையாளர்களை [Target Audience] குறிவைக்குமா? என்று கேட்டால் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான விடை ஒன்றைச் சொல்ல முடியாது.கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பான பார்வையாளர்களை நோக்கியே அதிகமான படங்கள் எடுக்கப்படுகின்றன. கலவையான அல்லது பொதுவான பார்வையாளர்கள் தொலைக்காட்சி அலைவரிசைகளின் போட்டியால் திரை அரங்கிற்கு வருவதைக் குறைத்துக் கொண்ட நிலையில் குறிப்பிட்ட பார்வையாளர்களை நோக்கிப் படம் எடுப்பது என்ற நகர்வு தவிர்க்க முடியாத ஒன்று. பொதுநிலைப் பார்வையாளர் என்ற திரளை உருவாக்குவதில் முக்கியமான பங்கு வகித்தவர்கள் பெண்கள்தான். நடுத்தர வர்க்கத்துக் குடும்பப் பெண்களின் விருப்பங்களே பொதுநிலைப் பார்வையாளர் திரளை உருவாக்கித் திரை அரங்கிற்கு இழுத்துக் கொண்டு வரக்கூடியன. அவர்களில் கணிசமான தொகையினரைத் தொலைக்காட்சித் தொடர்கள் கட்டிப் போட்டு விட்ட நிலையில் புதிய பார்வையாள இலக்குகள் குறி வைக்கப்பட்டன.தொடர்ந்து வெற்றிப் படங்களை நடித்து வந்த விஜயின் படங்கள் எல்லாம், இளையோர்கள் - அதிலும் இளைஞர்கள் என்னும் குறிப்பிட்ட வகைப் பார்வையாளர்களை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் தான். அவருடைய போட்டியாளராக முன்னிறுத்தப்படும் அஜித்தின் படங்களும் யுவதிகளையும் இளைஞர்களையும் குறி வைக்கும் படங்கள் எனலாம். இந்தப் போக்கு மிகச் சமீபத்தில் வேறு தளத்திற்குச் சென்றுள்ளது. பெரியவர்கள், பெண்கள், இளையவர்கள், மாணவர்கள் என்று பொது அடையாளத்துடன் கூடிய கூட்டம் என்ற இலக்கு இடம்சார்ந்த சமூகப்பிரிவுகள் சார்ந்த கூட்டமாகக் கணிக்கப்படுகின்றன. இன்றும் திரை அரங்கிற்கு வந்து படம் பார்க்கும் கூட்டமாக இருப்பவர்கள் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் சேரிகளில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களே என்பது திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் கணக்கு. எனவே அவர்களிலிருந்து உண்டான மனிதர்களாகப் பாத்திரங்களையும், அவர்கள் உலாவும் சேரிகளை வெளிகளாகவும், அவர்களின் மதிப்பீடுகள் என இவர்கள் கருதும் வாழ்க்கை மதிப்பீடுகளை படத்தின் செய்தியாகவும் கொண்டு படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.தாதாக்களின் படங்கள் எனப் பெரும்பத்திரிகைகள் குறிப்பிட்ட படங்களின் காட்சி அமைப்புகளைக் கவனித்தவர்களுக்கு இது தெளிவாகத் தெரியக்கூடிய ஒன்றுதான். சேரிகளின் வெளிகளை அப்படங்கள் எவ்வாறு காட்டுகின்றன என்பதும், அங்கு வாழும் மனிதர்கள் -குறிப்பாக இளைஞர்கள் எவ்வாறு எடுப்பார் கைப்பிள்ளைகளாக- பணத்திற்காக- எஜமான விசுவாசத்திற்காக மனித உயிர்களை எடுக்கும் கொலைகாரர்களாகவும், சமூகவிரோதச் செயல்கள் எனச் சொல்லப்படும் விபச்சாரம், கள்ளச்சாராயம், போதை மருந்துகள் விற்பனை போன்றனவற்றில் ஈடுபடுகிறவர்களாகவும் காட்டுகின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டியன. விளிம்புநிலை மனிதர்களை வாழ்க்கை மதிப்பீடுகள் எதுவும் அற்றவர்களாகவும், பின்பற்ற விரும்பாதவர்களாகவும் காட்டுவதன் மூலம் உண்டாக்க விரும்பும் கருத்து யாருக்குச் சாதகமாக அமையும்? என்பது எழுப்பப்பட வேண்டிய கேள்வி. தலித் மக்கள் அரசியல் சக்தியாகத் திரட்டப்படும் இன்றைய கால கட்டத்தில் அவற்றிற்கெதிரான பொதுக் கருத்தை உண்டாக்கும் நோக்கம் இத்தகைய படங்களை இயக்குபவர்களுக்கும் தயாரிப்பவர்களுக்கும் இருக்கும் எனச் சந்தேகப்படுவது நியாயமற்ற சந்தேகம் அல்ல. இவ்விவாதம் தனியாக நடத்த வேண்டிய விவாதம்.பாட்ஷா தொடங்கி வெற்றிப்படங்களாக நடித்து வந்த ரஜினிகாந்தின் பாபா படம் அடைந்த தோல்விக்குப் பல காரணங்கள் இருந்த போதிலும், பார்வையாளர் கூட்டம் குறிப்பான இலக்குப் பார்வையாளர்களாக மாற்றப்பட்டதும் ஒரு முக்கியமான காரணம் எனலாம். கலவையான பார்வையாளர்களின் பொதுப் புத்திக்குள் அடைபடாத பாபாவின் ஆன்மீகச் சொல்லாடலை விவாதப் பொருளாக்கிய அந்தப் படம் எண்ணிக்கையில் மிகக் குறைவான ஆன்மீகவாதிகளின் இலக்காக மாறிவிட்டது. பாபாவின் தோல்விக்கான காரணம் உணரப்பட்ட நிலையில் அடுத்து நடித்த சந்திரமுகியில் சரிசெய்து வெற்றி பெற்றார் ரஜினிகாந்த். எல்லாவகைப் பார்வையாளர்களும் கண்டு திளைக்கும் காட்சிகளும் ரகசியங்களும் அப்படத்தில் சரிவிகிதத்தில் கலக்கப்பட்டன. அத்தகைய கலவைக்கேற்ற இயக்குநராக பி.வாசுவைத் தேர்வு செய்ததில் தான் ரஜினிகாந்தின் வெற்றி இருந்தது.இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் வெற்றி அப்படிப்பட்டதொரு வெற்றிதான். திரைப்பட இயக்கம் என்ற அளவில் எந்தவிதப் புதுமையையும் இந்தப் படம் முயற்சிக்கவில்லை. ஏற்கெனவே வெற்றி பெற்ற இரட்டை வேடத் தமிழ் சினிமாக்களிலிருந்து கலக்கி எடுத்த பழைய கதை மற்றும் திரைக்கதை அமைப்பை அப்படியே எடுத்துக் கொண்டுள்ளது. மையப்பாத்திரங்களின் முரண் மற்றும் வளர்ச்சி என்பதிலும் கூட புதுமை எதையும் முன் வைக்காத படம் தான் 23 ஆம் புலிகேசி. ஆனால் படத்தின் தயாரிப்பாளரான ஷங்கரும் இயக்குநர் சிம்புத்தேவனும் எடுத்த தைரியமான முடிவு மொத்தப் படத்தையும் நகைச்சுவைப் படமாக எடுப்பது எனத் தீர்மானித்தது தான். அத்தீர்மானித்துடன் மையக் கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை இரட்டை வேடத்தில் நடிக்க வைப்பது என்ற முடிவும் கூடத் தைரியமான முடிவு தான். அவர்கள் எடுத்த இந்தத் தைரிய [risk] முடிவுகள் வியாபார வெற்றியை மட்டும் அல்லாமல் கவனிக்கத்தக்க படம் என்ற பெருமையையும் பெற்றுத் தந்துள்ளது.சூழலில் பெறும் தனித்தன்மை23 ஆம் புலிகேசியின் வியாபார வெற்றிக்குப் பின்னால் அந்தப் படம் வந்த சூழல் முக்கியமான இடத்தை வகிக்கிறது. ரத்தம், வன்முறை, அடிதடி, கொலை என அலையும் இளைஞர்களின் சமூகவிரோதச் செயல்களின் பின்னணிகளைக் குறிப்பான சூழலில் நிறுத்தி நியாயப்படுத்தும் படங்களாக - தாதாக்களின் உலகத்தை வெட்ட வெளிச்சமாக்குவதாகவும், அவர்களோடு இணைந்து நிகழ்கால அரசியல் மற்றும் அதிகார அமைப்புக்கள் ஊழல் புரிவதாகவும் பேசும் படங்கள் வரிசையாக வந்து கொண்டிருந்த சூழலில் அவற்றிலிருந்து விலகி நின்ற ஒற்றைக் காரணமே புலிகேசியின் வெற்றிக்கு முதல் காரணம். நிகழ்வுச் சூழலால் உண்டாகும் இத்தகைய எதிர்பார்ப்புக்கு மாறான கவனம் பெறுதல் அல்லது வியாபார வெற்றியை தனி மனிதர்கள் அதிர்ஷ்டம் என்றோ யோகம் என்றோ கருதி விடுவார்கள். ஆனால் திரைப்படத்துறையினர் அதனை காலத்தின் போக்கு [Trend] எனக் கருதிவிடுகிறார்கள் என்பதுதான் விநோதம். அப்படிக் கருதுவதன் விளைவாக அப்படத்தின் நகல்களாகச் சில படங்களை எடுத்துத் தள்ளி விடுவார்கள். ஆனால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியை நகல் எடுப்பதும் இயலாத ஒன்று. ஏனெனில் அப்படம் புதிய அழகியல்களைத் தனது கருவியாக்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் கருவிகளாக இருப்பனவற்றை வரலாறு, அங்கதம் அல்லது பகடியாடுதல் என இரண்டு வார்த்தைகளில் குறிப்பிடலாம்.அலையும் பயணம்இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தைப் பார்த்தவர்கள், சரித்திர காலப் படத்தைப் பார்த்த திருப்தியுடன் தான் வீடு திரும்புகின்றனர். தமிழகப் பரப்படங்கிய இந்திய வரலாற்றில் இப்படியொரு அரசன் இருந்தான் என்பதற்கான எந்தக் குறிப்பையும் வரலாற்றுப் புத்தகங்களில் அவர்கள் படித்ததில்லை. வாய்மொழிக் கதையாகக் கூடக் கேட்டதுமில்லை. புலிகேசி என்ற அரச பரம்பரை தமிழ் நிலப்பரப்பிற்கு வெளியே இருந்ததாக ஒரு வேளை வாசித்திருக்கலாம். அந்தப் பரம்பரைக்கும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்த காலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த உண்மை படம் பார்க்கும் பலருக்கும் தெரியும். படத்தை இயக்கிய சிம்புத்தேவனுக்கும் தயாரித்த ஷங்கருக்கும் கூட நன்றாகவே தெரியும்.வரலாறு சார்ந்த நிகழ்வு ஆதாரம் எதுவும் இல்லாமலேயே இந்த அரசனின் சாயல் கொண்ட குறுநில மன்னர்கள் இந்தியாவில் இருந்திருக்க வாய்ப்புண்டு; ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலப் பகுதியில் இருந்த பாளையக்காரர்களில் பலரும் இத்தகையவர்களே என்பதாக நம்பச் செய்யும் விதமாக படத்தின் கதைப் போக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி நம்பச் செய்தாலும் இந்தியாவில் அல்லது தமிழகப் பரப்பில் எந்தப் பகுதியை அந்த அரசர்கள் ஆண்டார்கள் என்ற கேள்வி எழுப்பப்படும் என்பதால் குறிப்பான வெளி எதுவும் சுட்டப்படாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு என்ற உண்மையையும் இயக்குநர் சொல்லவே செய்துள்ளார். எழுத்துக்களாகச் சொல்லப்படும் தகவல்களில் இவை மறைந்து நிற்கின்றன. புனைவை வரலாறாகக் காட்டுவது என்று முடிவுடன், வெளிப்பாட்டு முறையை அங்கதபாணி எனத் திட்டமிட்டுக் கொண்டு படத்தை எடுத்துள்ளனர். சமீபகாலத்தில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாக்களில் கச்சிதமாகத் திட்டமிட்டு எடுத்த சினிமா என்பதும் கூட அப்படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.ஆங்கிலேயர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருந்த பாளையக்காரர்களில் ஒருவனான 23 ஆம் புலிகேசி என்ற அடையாளம் உண்டாக்கப்படுவதன் மூலம் விதேசி X சுதேசி என்ற எதிர்வு உண்டாக்கப்பட்டு சுதேசிய உணர்வு ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்றாக முன்னிறுத்தப்படுகிறது. இயல்பாகவே இந்திய மனம் சுதேசிய உணர்வு, நாட்டுப்பற்று, சொந்த மண்ணின் பெருமை போன்ற அடிப்படை உணர்வுகளுக்குள் அலைந்து கொண்டிருக்கும் மனம் என்பதால், மக்கள் நலனை மையப்படுத்தாமல், தாய்மாமனின் கைப்பொம்மையாக இருந்து விவேகமும் வீரமும் இல்லாமல் வெற்று அதிகாரம் செய்யும் இம்சை அரசன் வெறுக்கத்தக்கவனாக ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அந்தக் கற்பனைப் பாத்திரம் இந்திய வரலாற்றில் -குறிப்பாக ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த குறுநில மன்னனின் பாத்திரமாக நம்பப்பட்டு அவனது செயல்பாடுகளும் ஆட்சி முறையும் கேலிக்குரிய அபத்தங்கள் எனக் கருதப்படுகின்றன. இதைச் சாதித்துள்ள இயக்குநர் சிம்புத்தேவன், இம்சை அரசனை வரலாற்றுப் படம் என்று நம்பும்படி செய்வதற்குப் பின்பற்றியுள்ள உத்தி பாத்திரங்களின் உடை, மற்றும் ஒப்பனைகள் மட்டுமே.ஆங்கிலேயர்களின் கப்சி, அக்கமாலா பானங்களுக்கு இம்சை அரசன் அனுமதி அளிக்கும் காட்சியில் நிகழ்கால இந்திய அரசுகள் பன்னாட்டுக் குளிர்பானங்களான பெப்சி, கொக்கோகோலாவை அனுமதித்த நிகழ்வும், அப்பானங்களில் இந்தியர்களின் உயிர்களுக்கு ஆபத்தூட்டும் நச்சுப் பொருட்களும், பூச்சிகளும் கலந்திருக்கின்றன என்ற தகவல்களும் நினைவுக்கு வராமல் போகாது. அதே போல் கொள்ளையர்களை அடக்க வேண்டிய அரசனே அவர்களின் நண்பனாக இருக்கிறான் எனக் காட்டும் போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்புடைய ஆளுங்கட்சிகளுக்கு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் குழுக்களோடும் நபர்களோடும் உள்ள தொடர்புகள் நினைவுக்கு வராமல் போகாது. தேர்தல்கள் மூலமாக அரசதிகாரத்திற்கு வருபவர்களுக்குப் பயன்படும் கருவியாகப் பிரிவினைவாதச் சிந்தனைகள் இருக்கின்றன என்ற கருத்தை சாதிச்சண்டை மைதானக் காட்சியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறந்த வீரர் பரிசளிப்புக் காட்சியும் நினைவூட்டத்தான் செய்யும்.பயன்படுத்த முடியாத ஆயுதங்கள், சுலபமாக இடிந்து விடக்கூடிய கட்டடங்கள், வேலை நேரத்தில் தூங்கும் ஊழியர்கள், செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல் சம்பளம், போனஸ் எனக் கேட்கும் பணியாளர்கள் என விரிக்கப்பட்டுள்ள காட்சிகள், அரசுத்துறைகள் மீதும் பொதுத்துறை ஊழியர்களின் மேலும் வைக்கப்படும் விமரிசனங்கள் என்பதைச் சுலபமாகப் பார்வையாளர்கள் உணரவே செய்கின்றனர். ஊழல், கையூட்டு, தரகு, சோம்பேறித்தனம், தட்டிக் கழித்தல், சிபாரிசுகளின் வழியாகப் பணியில் சேருதல் என முடங்கிக் கிடக்கும் நிகழ்கால அரசமைப்பை விமரிசனத்திற்குள்ளாக்கும் பல காட்சிகள் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் அரண்மனையில்- ஆட்சிக் காலத்தில் நிறைந்திருந்திருந்தன எனப் படம் சொன்னாலும் இவை அனைத்தும் இன்றைய இந்தியாவின்/ தமிழகத்தின் அவலங்கள் எனச் சொல்வது தான் படத்தின் அடிப்படை நோக்கம்.நிகழ்கால அரசியலை விமரிசிக்கும் இந்தப் படம் எத்தகைய மாற்றம் வரவேண்டும் என்ற முன்மொழிதலில் குழப்பத்தையும் தெளிவின்மையும் காட்டுவதாகப் பலருக்கும் தோன்றலாம். அரசாங்கத்தை விமரிசனம் செய்துள்ளதாலேயே படத்திற்குச் சிவப்புச் சாயத்தைச் சிலர் பூசலாம். ஆனால படத்தின் இயக்குநரான சிம்புத்தேவனுக்கும் தயாரிப்பாளரான ஷங்கருக்கும் அந்தச் சாயம் உடன்பாடான சாயம் அல்ல என்பதைப் படத்திலேயே வைத்துள்ளனர். அந்நியர்கள் வெளியேற்றப் படவேண்டும்; ஆட்சி அமைப்பு மாற வேண்டியதில்லை; அதே அரசனே கூட தவறுகளைக் களைந்து கொண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறலாம் என்பதாகப் படத்தை முடிக்கும் சிம்புத்தேவன் படத்தின் மையக்கதாபாத்திரமான (மனம் மாறிய) இம்சை அரசனின் வழியாக அறிவிக்கும் புதிய [பத்து] கட்டளைகள் கவனிக்க வேண்டியவை. இருக்கிற அமைப்பை மாற்றாமல் பழுதுபார்த்துப் பயன்படுத்தினால் போதும் என வலியுறுத்தும விதமாகவே அந்த அறிவிப்புகள் உள்ளன. இந்த அறிவிப்புகளால் உண்டாகும் மாற்றங்கள் இடதுசாரிகள் விரும்பும் மாற்றங்கள் அல்ல. நேர்மையான அரசைத்தர விரும்பும் வலதுசாரிகளின் மாற்றங்கள் அவை. அந்த நம்பிக்கை மட்டுமே இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இருப்பதைப் படம் தெளிவாகவே வெளிப்படுத்தியுள்ளது.அவர்கள் நம்புவதைப் படமாக எடுத்ததன் மூலம் நிகழ்கால அரசியல் விமரிசனப் படம் ஒன்றை எடுத்து, பார்வையாளர்களைப் பார்க்கச் செய்ததன் மூலம் வணிக வெற்றியையும் அடைந்துள்ளனர். இதே நோக்கத்தோடு வலதுசாரிச் சித்தாந்தியும் பத்திரிகையாளரும் நடிகருமான சோ அவர்கள் எடுத்த சில சினிமாக்களும் மேடையேற்றிய நாடகங்களும் [முகமது பின் துக்ளக், யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன.?] இந்த அளவு கவனத்தைப் பெறவில்லை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். காரணம் அவை வெறும் வார்த்தை சார்ந்த விமரிசனமாக மட்டுமே இருந்தன. வெகுமக்கள் சினிமா என்ற ஊடகத்தின் கலையம்சங்களையும் காட்சி அமைப்புகளையும் நிராகரித்திருந்தன.அரசர்கள் காலத்து உடை என்பதாக ஏற்கனவே அறிமுகம் பெற்றுள்ள பளபளப்பு ஆடைகளையும் மிகக் குறைந்த செலவில் அமைக்கப்பட்ட அரங்க அமைப்பையும் மொத்தத் தமிழ்நாட்டிற்கும் புரியக்கூடிய பொதுத் தமிழ் வசனங்களையும் வைத்துக் கொண்டு பார்வையாளர்களைச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி அழைத்துப் போயுள்ளனர். அதே நேரத்தில் காட்சிக் கோர்வைகளையும், பேசப்படும் வசனங்களையும் பயன்படுத்தி நிகழ்காலத்திற்கும் அழைத்து வந்துள்ளனர். கடந்தகாலத்திற்குள்ளும் நிகழ்காலத்திற்குள்ளும் பார்வையாளர்களை மாறிமாறிப் பயணம் செய்யும்படி தூண்டும் வெளிப்பாட்டு முறையில் தான் அங்கதபாணி [Satire] யின் வெற்றி அமைந்திருக்கிறது. அந்தப் பாணியை மொத்தப் படத்திற்கும் பயன்படுத்திய வகையில் சிம்புத்தேவன் கவனிக்கத் தக்க இயக்குநராக ஆகியிருக்கிறார். இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி குறிப்பிடத்தக்க படமாக ஆகியிருக்கிறது. அப்படத்தின் மையக்கதாபாத்திரங்களை ஏற்று நடித்த வடிவேலுவும் நாசரும் நடிப்புக் கலையின் சாத்தியங்களைத் தொட்டுள்ளனர்.

கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...ஞாநி
1. மக்களின் கோடிக்கணக்கான ரூபாய் வரிப் பணத்தில், தமிழக அரசு இலவச கலர் டி.வி. வழங்குவது சரியா?காதலிலும் யுத்தத்திலும் ஜெயிக்க எது செய்தாலும் சரிதான் என்பது போல, தேர்தல் அரசியலுக்கும் இப்போது ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் இன்னும் 90 லட்சம் குடும்பங்களுக்குக் கழிப்பறைகள் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலின்போது, யாராவது அதை வாக்குறுதியாக வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.2. கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதலமைச்சர் பதவிக்கு வரும் சமயங்களில், சினிமா துறை சார்பில் பிரமாண்டமான பாராட்டு விழாவும், கலை நிகழ்ச்சியும் நடத்துவது ஏன்?மிகவும் அருவருப்பான தமிழக அரசியல் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. பாராட்டு விழாவின்போது, கலை நிகழ்ச்சி என்ற பெயரில், ஆபாசமான அசைவுகளுடன் நடன நிகழ்ச்சிகளையும், காது கூசும் அளவுக்குப் பொய்யான புகழுரைகளைச் சிலர் மனப்பாடம் செய்து வந்து ஒப்பிப்பதையும் மூன்று, நான்கு மணி நேரம் உட்கார்ந்த இடத்தில் ஆடாமல், அசையாமல் பார்வையாளராக இருந்து பார்க்கிறார்கள் நமது முதலமைச்சர்கள். இதே போல அத்தனை மணி நேரம் ஒரு கல்வியாளரோ, ஒரு விஞ்ஞானியோ... அட்லீஸ்ட் ஒரு குடிமகனே(ள) மனம் விட்டுச் சொல்வதைக் கேட்க முதலமைச்சர்கள் தயாராக இருந்தால், தமிழகமே வாழும் சொர்க்கமாக மாறிவிடும்.சினிமாக்காரர்களில்கூட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கொட்டகையாளர்கள் ஆகியோர்தான் கேளிக்கை வரி, மான்யம், படப்பிடிப்புக் கட்டணம் போன்ற அரசு சலுகைகளை எதிர்பார்த்து, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். பல நடிகர், நடிகைகள் விருப்பம் இல்லாமல் கட்டாயத்தின் பேரில்தான் இதில் பங்கேற்கிறார்கள்.மக்களிடம் தங்களைவிடப் பிரபலமாக இருக்கும் சினிமா முகங்கள், தங்களைப் பாராட்டுவது தமது மக்கள் செல்வாக்கை உயர்த்தும் அல்லது சரியவிடாமல் தடுக்கும் என்றெல்லாம் அரசியல்வாதிகள் நம்பிக் கொண்டு இருந்தால், ரொம்பப் பரிதாபம்தான்! அடுத்து வரும் ஆட்சி மாற்றங்களே இதற்கு நல்ல சாட்சி!இந்தத் தடவை, சினிமா உலக முக்கியஸ்தர்கள் கலைஞரைப் புகழும் நிகழ்ச்சியை சன் டி.வி. ஒளிபரப்பிய பிறகு, சென்ற முறை ஜெயலலிதா முதல்வரானபோது இதே முக்கியஸ்தர்கள் புகழ்ந்ததை ஜெயா டி.வி. மறு ஒளிபரப்பு செய்து உதவ வேண்டும் என்றும்... அதற்கடுத்த நாளே, இதற்கு முந்தைய தடவை கலைஞர் முதல்வரானபோது போடப்பட்ட ஜால்ராக்களை சன் டி.வி. மறு ஒளிபரப்பு செய்து நம்மையெல்லாம் உய்விக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.3. கல்யாணம் ஆகிவிட்டால் ஹீரோயின்கள் ஏன் 'குடும்பப் பெண்கள்' ஆகிவிடுகிறார்கள்? நடிப்பதை ஏன் நிறுத்திவிடுகிறார்கள்? தொடர்ந்து நடித்தால் என்ன?கல்யாணம் வரை நடிகைகள் 'கனவுக் கன்னி'களாக இங்கே ஆக்கப்பட்டு இருப்பதுதான் இந்த அபத்தத்துக்குக் காரணம். இந்த விசித்திரம் வேறு எந்தத் துறையிலும் இந்த அளவுக்கு இல்லை. கம்ப்யூட்டர் இன்ஜினீயர் மாலதியோ, பயோ டெக்னோகிராட் ஆயிஷாவோ, ஐ.பி.எஸ். அதிகாரி எலிசபெத்தோ, கணக்கு டீச்சர் மலர்விழியோ திருமணத்துக்குப் பின் வேலையை ராஜினாமா செய்வதில்லை. ஆனால், ஹீரோயின்கள் ராஜினாமாவில் கையெழுத்து போட்ட பின்னர் தான், கழுத்தில் தாலி ஏறுகிறது.நடிப்பையும் ஒரு வேலையாக, ஆபீசுக்குப் போகிற விஷயமாகப் பெண்கள் விஷயத்தில் மட்டும் நம் சமூகம் இன்னும் பார்க்கக் கற்றுக் கொள்ளவில்லை. இதற்குக் காரணம், சினிமாவை வணிக ரீதியில் ஜெயிக்க வைப்பதற்காகக் காலம்காலமாக நடிகைகளைக் கனவுக் கன்னிகளாக ரசிகர்கள் மனதில் பதியவைக்கும் உத்தியை சினிமா உலகம் தீவிரமாகப் பின்பற்றி வருவதுதான். திருமணமாகி விட்டால் ரசிகர்களிடம் இந்தக் கவர்ச்சி போய்விடும், மார்க்கெட் சரிந்துவிடும், வசூல் குறைந்துவிடும் என்ற சூழலையும் சினிமா உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.இரண்டாவது காரணம், பெண்ணுடைய உடலை அவளுக்குச் சொந்த மானதாகப் பார்க்காமல், இன்னமும் ஆணுக்குச் சொந்தமான பொருளாக மட்டுமே பார்க்கும் பார்வை! நடிப்புத் தொழிலில் உடலைத் தொட்டு நடிக்க வேண்டிய சூழல் இருப்பதால், திருமணத்துக்குப் பின் தனக்குச் சொந்தமான மனைவியின் உடலை வேறு ஆண் நடிப்புக்காகக்கூடத் தொட்டுவிடக் கூடாது என்ற உடைமையாளர் மனோநிலை இங்கே நிலவுகிறது. நர்ஸைப் போல நடிகையையும் கருதும் பக்குவம் வரவில்லை.அதே சமயம், பெண்ணின் உடல் தான் ஆணுக்குச் சொந்தமானது; ஆணின் உடல் பெண்ணுக்குச் சொந்தமானது அல்ல. அது அவனுக்கே சொந்தமானது. அதனால்தான், திருமணத்துக்குப் பின் எந்த ஹீரோவும் நடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று சொல்லும் உரிமை ஹீரோக்களின் மனைவிகளுக்கு இல்லை.நடித்தது போதும், இனி குடும்பப் பொறுப்புதான் என்று சில பெண்கள் தாமாகவே முடிவு செய்யவும் காரணங்கள் உண்டு. படிப்பு, அலுவலகம் போன்ற சராசரி வாழ்க்கை இல்லாமல் மிகச் சிறிய வயதிலேயே கவர்ச்சி உலகத்தில் தள்ளப்பட்டதால் ஏற்படும் அலுப்பு ஒரு காரணம். அதைவிட முக்கியமானது, குடும்பம் என்பது பெண்ணின் பொறுப்பு என்ற கருத்து வேரூன்றியிருப்பது. திருமணத்துக்குப் பின் உன் வேலையை என்ன செய்யப் போகிறாய்? என்ற கேள்வியை எந்த ஆணிடம் நம் சமூகத்தில் கேட்டாலும், அது அபத்தமாகக் கருதப்படும். அதே கேள்வியை வேலைக்குச் செல்லும் பெண்ணிடம் கேட்காமல் விட்டால் தான் தப்பு என்கிற நிலைமையும் இங்கு உண்டு.காரணம், குடும்பத்துக்குப் பொறுப்பு பெண்தான் என்று நினைப்பதே ஆகும். அதனால்தான் ரிசர்வ் வங்கி கவர்னராக ஒரு மைதிலி வந்தால்கூட, அவரிடம் பத்திரிகை பேட்டியில் 'எப்படி வீட்டுப் பொறுப்பையும் சேர்த்துச் சமாளிக்கிறீர்கள்?' என்ற கேள்வி தவறாமல் கேட்கப்படுகிறது. 'இப்போதும் என் கணவருக்கும், என் குழந்தைகளுக்கும் என் கையால் சமைத்த வெண்டைக்காய் பொரியல்தான் பிடிக்கும்' என்று ரிசர்வ் வங்கி கவர்னர் மைதிலியும் பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கி கவர்னராக வரும் ரங்கராஜன்கள் வெண்டைக்காய் பொரியல் பற்றிப் பேசத் தேவையில்லை. இந்த ஆண் சார்ந்த அணுகுமுறையில் மிக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சினிமா உலகின் கனவுக் கன்னிகள், அவ்வளவுதான்!இந்த வார புதிர்:வேலை வாய்ப்பு தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்களில் மிக அதிகமானவர்கள் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். எந்த மாநிலத்திலிருந்து அதிகம் செல்கிறார்கள்?1. தமிழ்நாடு2. கேரளா3. ஆந்திரப் பிரதேசம்பதிலை எளிதாக யூகித்திருப்பீர்கள், கேரளாதான் என்று! ஆனால், கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்... முதல் இடத்தில் இருக்கும் கேரளாவுக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எண்ணிக்கை வித்தியாசம் வெறும் 8,000 பேர்தான். கேரளா - 1 லட்சத்து 25 ஆயிரம் பேர். தமிழ்நாடு - 1 லட்சத்து 17 ஆயிரம் பேர்.(ஆனந்தவிகடன் 1-10-2006)
இந்தியாவில் உள்ள தீவிரவாத இயக்கங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாம் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் இல்லை. இவை எல்லாம் இந்திய அரசால் கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்ட தீவிரவாத தொடர்புடைய அமைப்புகள்.1. அஸ்ஸாம்United Liberation Front of Asom (ULFA)National Democratic Front of Bodoland (NDFB)United People's Democratic Solidarity (UPDS)Kamtapur Liberation Organisation (KLO)Bodo Liberation Tiger Force (BLTF)Dima Halim Daogah (DHD)Karbi National Volunteers (KNV)Rabha National Security Force (RNSF)Koch-Rajbongshi Liberation Organisation (KRLO)Hmar People's Convention- Democracy (HPC-D)Karbi People's Front (KPF)Tiwa National Revolutionary Force (TNRF)Bircha Commando Force (BCF)Bengali Tiger Force (BTF)Adivasi Security Force (ASF)All Assam Adivasi Suraksha Samiti (AAASS)Gorkha Tiger Force (GTF)Barak Valley Youth Liberation Front (BVYLF)Muslim United Liberation Tigers of Assam (MULTA)United Liberation Front of Barak ValleyMuslim United Liberation Front of Assam (MULFA)Muslim Security Council of Assam (MSCA)United Liberation Militia of Assam (ULMA)Islamic Liberation Army of Assam (ILAA)Muslim Volunteer Force (MVF)Muslim Liberation Army (MLA)Muslim Security Force (MSF)Islamic Sevak Sangh (ISS)Islamic United Reformation Protest of India (IURPI)United Muslim Liberation Front of Assam (UMLFA)Revolutionary Muslim Commandos (RMC)Muslim Tiger Force (MTF)People’s United Liberation Front (PULF)Adam Sena (AS)Harkat-ul-MujahideenHarkat-ul-Jehad2.ஜம்மு மற்றும் காஷ்மீர் தீவிரவாத குழுக்கள்Lashkar-e-Omar (LeO)Hizb-ul-Mujahideen (HM)Harkat-ul-Ansar (HuA, presently known as Harkat-ul Mujahideen)Lashkar-e-Toiba (LeT)Jaish-e-Mohammad Mujahideen E-Tanzeem (JeM)Harkat-ul Mujahideen (HuM, previously known as Harkat-ul-Ansar)Al Badr Jamait-ul-Mujahideen (JuM)Lashkar-e-Jabbar (LeJ)Harkat-ul-Jehad-i-IslamiAl BarqTehrik-ul-MujahideenAl JehadJammu & Kashir National Liberation ArmyPeople’s LeagueMuslim Janbaz ForceKashmir Jehad ForceAl Jehad Force (combines Muslim Janbaz Force and Kashmir Jehad Force)Al Umar MujahideenMahaz-e-Azadi IslamiJamaat-e-TulbaJammu & Kashmir Students Liberation FrontIkhwan-ul-MujahideenIslamic Students LeagueTehrik-e-Hurriat-e-KashmirTehrik-e-Nifaz-e-Fiqar JafariaAl Mustafa Liberation FightersTehrik-e-Jehad-e-IslamiMuslim MujahideenAl Mujahid ForceTehrik-e-JehadIslami Inquilabi Mahaz3.ஜம்மு மற்றும் காஷ்மீர் தீவிரவாத அரசியல் குழுக்கள்Mutahida Jehad Council (MJC)Jammu & Kashmir Liberation Front (JKLF)All Parties Hurriyat Conference (APHC)Dukhtaran-e-Millat (DeM)4. மணிப்பூர்United National Liberation Front (UNLF)People’s Liberation Army (PLA)People’s Revolutionary Party of Kangleipak (PREPAK)Kangleipak Communist Party (KCP)Kanglei Yawol Kanna Lup (KYKL)Manipur Liberation Tiger Army (MLTA)Iripak Kanba Lup (IKL)People’s Republican Army (PRA)Kangleipak Kanba Kanglup (KKK)Kangleipak Liberation Organisation (KLO)Revolutionary Joint Committee (RJC)National Socialist Council of Nagaland -- Isak-Muivah (NSCN-IM)People’s United Liberation Front (PULF)North East Minority Front (NEMF)Islamic National Front (INF)Islamic Revolutionary Front (IRF)United Islamic Liberation Army (UILA)United Islamic Revolutionary Army (UIRA)Kuki National Front (KNF)Kuki National Army (KNA)Kuki Revolutionary Army (KRA)Kuki National Organisation (KNO)Kuki Independent Army (KIA)Kuki Defence Force (KDF)Kuki International Force (KIF)Kuki National Volunteers (KNV)Kuki Liberation Front (KLF)Kuki Security Force (KSF)Kuki Liberation Army (KLA)Kuki Revolutionary Front (KRF)United Kuki Liberation Front (UKLF)Hmar People’s Convention (HPC)Hmar People's Convention- Democracy (HPC-D)Hmar Revolutionary Front (HRF)Zomi Revolutionary Army (ZRA)Zomi Revolutionary Volunteers (ZRV)Indigenous People's Revolutionary Alliance(IRPA)Kom Rem People's Convention (KRPC)Chin Kuki Revolutionary Front (CKRF)5. மேகாலாயாHynniewtrep National Liberation Council (HNLC)Achik National Volunteer Council (ANVC)People’s Liberation Front of Meghalaya (PLF-M)Hajong United Liberation Army (HULA)6. நாகலாந்துNational Socialist Council of Nagaland (Isak-Muivah) – NSCN(IM)National Socialist Council of Nagaland (Khaplang) – NSCN (K)Naga National Council (Adino) – NNC (Adino)7. பஞ்சாப்Babbar Khalsa International (BKI)Khalistan Zindabad Force (KZF)International Sikh Youth Federation (ISYF)Khalistan Commando Force (KCF)All-India Sikh Students Federation (AISSF)Bhindrawala Tigers Force of Khalistan (BTFK)Khalistan Liberation Army (KLA)Khalistan Liberation Front (KLF)Khalistan Armed Force (KAF)Dashmesh Regiment Khalistan Liberation Organisation (KLO)Khalistan National Army (KNA)8. திரிபுராNational Liberation Front of Tripura (NLFT)All Tripura Tiger Force (ATTF)Tripura Liberation Organisation Front (TLOF)United Bengali Liberation Front (UBLF)Tripura Tribal Volunteer Force (TTVF)Tripura Armed Tribal Commando Force (TATCF)Tripura Tribal Democratic Force (TTDF)Tripura Tribal Youth Force (TTYF)Tripura Liberation Force (TLF)Tripura Defence Force (TDF)All Tripura Volunteer Force (ATVF)Tribal Commando Force (TCF)Tripura Tribal Youth Force (TTYF)All Tripura Bharat Suraksha Force (ATBSF)Tripura Tribal Action Committee Force (TTACF)Socialist Democratic Front of Tripura (SDFT)All Tripura National Force (ATNF)Tripura Tribal Sengkrak Force (TTSF)Tiger Commando Force (TCF)Tripura Mukti Police (TMP)Tripura Rajya Raksha Bahini (TRRB)Tripura State Volunteers (TSV)Tripura National Democratic Tribal Force (TNDTF)National Militia of Tripura (NMT)All Tripura Bengali Regiment (ATBR)Bangla Mukti Sena (BMS)All Tripura Liberation Organisation (ATLO)Tripura National Army (TNA)Tripura State Volunteers (TSV)Borok National Council of Tripura (BNCT)9. மிஜோராம்Bru National Liberation FrontHmar People's Convention- Democracy (HPC-D)10. அருணாச்சல பிரதேசம்Arunachal Dragon Force (ADF)11. இடதுசாரி தீவிரவாத குழுக்கள்People's Guerrilla ArmyPeople's War GroupMaoist Communist CentreCommunist Party of India-Maoist (CPI-Maoist)Communist Party of India (Marxist Leninist)Janashakti12. இந்தியாவில் தடை செய்யப்பட்ட மற்ற அமைப்புகள்Tamil National Retrieval Troops (TNRT)Akhil Bharat Nepali Ekta Samaj (ABNES)Tamil Nadu Liberation Army (TNLA)Deendar AnjumanStudents Islamic Movement of India (SIMI)Asif Reza Commando ForceLiberation Tigers of Tamil Eelam (LTTE)Kamatapur Liberation Organisation (KLO)Ranvir Sena.
Google Search- என்றொரு உளவாளி?
இது புதுமைவிரும்பியிடம் இருந்து இரவல் வாங்கியது.கடந்து இரண்டு வருடங்களாய், நான் அதிகமாய் சென்றுவந்து இணைய தளம் Google Search தான். ஒரு நாளைக்கு, குறைந்தது 20 சொற்கள் அல்லது வார்த்தைகளைத் தேடுவது எனக்கு வழக்கமாகும். இது பெரும்பாலும், நான் விரும்பிய புத்தகங்கள், படங்கள், இசைகள், தலைவர்கள் பற்றிய ஓசி விமர்சனங்களைப் படிப்பதற்காக இருக்கும். அபூர்வமாக, அது எனது தொழில் முன்னேற்ற விசயங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் இருந்து விடுவதுண்டு! இதே மாதிரி, மனதுக்கு படுகிற விசயங்களையெல்லாம், Google Searchல் தேடுகிற நோய் சில வருடங்களாய் எல்லோருக்கும் தொற்றி வருகிறது. நீங்கள் அப்படிப்பட்ட நோயுள்ளவராயிருந்தால், உங்களுக்கும், எனக்கும் சேர்த்து, இப்பொழுது ஒரு திடுக்கிடும் செய்தி.உங்களின் விருப்பங்களை, கனவுகளை, வினோதமான ஆசைகளைப் பற்றி அறிந்த, உங்கள் அந்தரங்க கட்டிடத்தின் மூலை-முடுக்குகளைப் பற்றி துல்லியமாய் அறிந்த இன்னொரு ஐந்து இருக்கின்றதென்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால், அது தான் உண்மை. அது வேறு யாருமில்லை- Google Search தான். இப்பொழுது எனது குற்றச்சாட்டுக்கு அடிப்படையான சில செய்திகளை சொல்லயிருக்கிறேன்.சில வாரங்களுக்கு முன்பாக, AOL என்ற தேடும் இணையம் (search-engine என்பதற்கு எவ்வளவு மோசமான மொழிபெயர்ப்புடா சாமி! என்று நீங்கள் புலம்புவது எனக்குக் கேட்கிறது) , 658, 000 பேர்களின் Search Key-words (30 million சொற் தொடுப்புகள் (queries)) தொகுப்பை பொது ஆராய்ச்சிக்காக வெளியிட்டிருந்தது. இது இந்த இணையத்தைப் பயன்படுத்தியவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. உபயோகிப்பவர்களின் பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, இதைத் திரும்பப்பெற்றுக்கொண்டதுடன், மன்னிப்பும் கேட்டுக்கொண்டது இந்த நிறுவனம். ஆனாலும், இந்த நிகழ்ச்சி search-keywords தொகுப்பின் முக்கியத்துவத்தை உணர உதவியாய் இருந்தது.இந்த தேடுதல்கள் மூலம் ஒருவர் தன்னைப் பற்றிய எல்லா தகவல்களையும், வெளியிட்டு விடுகிறார். உதாரணமாக அவரது பெயர் (எல்லோரும் google searchல் அவரவர் பெயரை தேடிப்பார்ப்பது ஒரு இயல்பான விசயம்), இப்பொழுதைய தொழில் (எந்த மாதிரியான தொழில் சம்பந்தமான வார்த்தைகளைத் தேடுகிறார் என்பதை வைத்து சொல்ல முடியும்), அவரது விருப்பங்கள் (இசை, திரைப்படங்கள் , கவிதைகள், புத்தகங்கள்) போன்றவற்றை போதுமான search-keywords database கொண்டு சொல்லிவிடமுடியும். மற்றபடி, அவரின் இருப்பிடம் (geographical location) கண்டுபிடிப்பது மிகமிக சுலபம். உதாரணமாக, IP (internet protocol) எண்ணை வைத்துக்கொண்டு, நீங்கள் எந்த ஊரில் இருந்து, எந்த இடத்தில் இருந்து இதைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிவிடமுடியும். அதற்கும் மேலாக, நீங்கள் இயலபான மன நிலையில் உள்ளவரா என்பதைக் கூட கண்டுபிடித்துவிட முடியும். உதாரணமாக, kill, murder, torture, child-porno, suicide, போன்ற வார்த்தைகளை இணையத்தில் ஒருவர் அடிக்கடி தேடுகிறார் என்றால், நிச்சயம் அவரது சில நட்டுகள் கழன்றுவிட்டன என்று சொல்லிவிடலாம்.இப்பொழுது ஒத்துக்கொள்கிறீர்களா? Google-search உங்களைப் பற்றி எல்லாமும் அறிந்த ஒரு உளவாளி என்று.கொசுறு தகவல்கள் :US நீதித் துறை (US justice department), Search-engine பயன்படுத்துபவர்களின் சொற்தொடுப்புகளை இரண்டு வருடங்களாவது அந்தந்த நிறுவனங்கள் சேமித்துவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. அதோடு, US அரசு இந்த சொற்தொடுப்பு தகவல்களை, Google, Microsoft நிறுவனங்களிடமிருந்து கேட்டிருப்பதும் அதை இந்த நிறுவனங்கள் தர மறுத்திருப்பதும் முன்பு வெளியான செய்திகள்.உங்களிடம் உள்ள ஒரே பாதுகாப்பு, நீங்கள் 65 பில்லியன் மனிதர்களில் ஒருவர் என்ற உண்மை தான். அதனால், இந்த தேடல் இணையங்கள் கையாளவேண்டிய தொகுப்பின் (database) அளவு அபரிமிதமானது. ஆனால், data-mining துறையில் நடக்கும் முன்னேற்றம் கூடிய விரைவில் இந்த database கையாளும் திறனை அதிகப்படுத்திவிடும்.
மறுபக்கம். 'தம்பி' திரை விமர்சனம்: ஷோபா சக்தி
திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்குப் பாலபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காகக் கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை வெட்டுவது, அரைவேக்காட்டுத்தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும் மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான 'காதல்' படங்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் திரைப்பட ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால் செய்வதாய்ச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய் பிசாசு நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும், துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப்படப் புகழ் நட்கத்திரங்களைத் தேர்ந்த சமூக சிந்தனையாளர்களாக உருவகித்து ஊடகங்கள் நேர்காணல் செய்வது, உணர்ச்சிப் பாவலர்கள் ஆணிய வக்கிரத்துடன் ஆபாசமாகத் திரைப்படப் பாடல்கள் புனைவது, சினிமா கவர்ச்சி என்ற ஒற்றை ஆயுதத்தின் துணையுடன் மட்டுமே திரைப்படத் துறையினர் அரசியல் பண்பாட்டு தளங்களின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றாக மாறிவிடுவது போன்ற அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ முடியும் என அடிக்கடி எமது தமிழகத் தோழர்கள் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு. தோழர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு செய்தி என்னிடம் உண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையேயும் இந்த அட்டூழியங்களில் சிலவாவது நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன.பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாரிஸ் நகரத்தில் ஈழத் தமிழர்கள் நடமாடும் கடை வீதிகளில் எல்லாம் இயக்குனர் சீமானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட 'தம்பி' திரைப்படத்துக்கான விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நடிகர் மாதவனின் விதம் விதமான தோற்ற நிலைகளின் கீழே 'அச்சந் தவிர், ரெளத்திரம் பழகு' என்ற புதிய ஆத்திசூடியின் வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. அச் சுவரொட்டிகளில் இப்படியாகவும் ஒரு வரி இருந்தது "முக்கிய குறிப்பு - இத் திரைப்படம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியது" . அதே நேரத்தில் அய்ரோப்பியத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தம்பி திரைப்பட முன்னோட்டம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. முன்னோட்டத்தில் முத்தாய்ப்பாய் சே குவேரா, மாவோ இருவரதும் புகழ்பெற்ற இரண்டு கூற்றுக்கள் திரையில் எழுத்துக்களாய் மின்னின. தம்பி திரைப்படம் வெளியானதும் புலம்பெயர் வாரப் பத்திரிகைகள் தம்பி படத்தைக் கொண்டாடின. மின் இலத்திரனியல் ஊடகங்களில் தம்பி திரைப்படமும் இயக்குனர் சீமானும் சே குவேரா பனியனும் முக்கிய பேசு பொருட்களாயின. மார்க்ஸின் மாணவன் பெரியாரின் பேரன் தம்பியின் தம்பி என்று என்று கிறுக்குத்தனமாகச் சீமான் பெரிய சாமானாக வர்ணிக்கப்பட்டார்.இந்த அமளிதுமளிக்குள் சீமான் அவுஸ்ரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு 20.10.2005 அன்று வழங்கியிழுந்த நேர்காணலை இணையத்தளம் ஊடாகச் சற்றே தாமதமாகக் கேட்க நேர்ந்தது. அந் நேர்காணலில் சீமான் இவ்வாறு கூறினார்: "சிங்கள அரசு முழுப் பலத்துடன்தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போது அதை ஒரு அரசின் இறையாண்மையாக உலகம் பார்க்கிறது, ஆனால் நாங்கள் கையில் ஆயுதத்தை எடுக்கும் போது அதை வன்முறையாகத் தீவிரவாதமாக உலகம் சொல்கிறது. அப்படிச் சொல்லக் கூடாது என்பதையே உள்ளர்த்தமாகக் கொண்டு தம்பி திரைப்படத்தை எடுத்து வருகிறேன்" இவை எல்லாற்றினதும் உச்சமாகத் தம்பி வெளியானதும் சீமான் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் "தம்பியின் வெற்றியைப் பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்" என்றார். இனி வருவது தம்பி திரைப்படத்தின் கதை:அன்பே உருவான பெற்றோரும் பாசமுள்ள ஒரேயொரு தங்கையும் உள்ள தமிழ் சினிமாவின் மாதிரிக் குடும்பமொன்றில் பிறந்தவன் தம்பி என்ற வேலுத் தொண்டைமான். இவனுக்கு முன்னதாகப் "படையப்பா", "பரமசிவன்", "திருப்பாச்சி" போன்றவர்களும் இத்தகைய மாதிரிக் குடும்பத்தில் பிறந்தவர்களே. கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவனான தம்பி மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்கத் தொடங்குகிறான். வேலைக்குப் போய்க் கொண்டிருக்கையில் தெருச்சண்டியன் பாண்டியனின் தம்பி செய்யும் கொலையொன்றைத் தற்செயலாகச் சீமானின் தம்பி பார்த்துவிடுகிறான். தம்பி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் பாண்டியனின் தம்பி உள்ளே தள்ளப்படுகிறான். இதனால் வெகுண்டெழுந்த தெருச்சண்டியன் பாண்டியன், தம்பியின் மாதிரிக் குடும்பத்தைக் கொன்றொழித்து விடுகிறான். இப்போது தம்பி சினந்தெழுந்து பாண்டியனைப் பழிவாங்க பாண்டியனின் வீட்டுக்குச் செல்லும் போது அங்கே பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைக் காண்கிறான். அந்தக் குடும்பம் தான் பாண்டியனைக் கொலை செய்வதால் பாதிக்கப்படக் கூடாது என எண்ணும் தம்பி பாண்டியனைச் சந்தித்து "நிறுத்திக் கொள்வோம்" என்கிறான். பாண்டியனோ தம்பியை அடித்து முள்ளுக் கம்பியில் காயப் போட்டுவிடுகிறான். காயங்கள் ஆறியதும் தம்பி வன்முறையை ஒழிக்கப் புறப்படுகிறான். வில்லன் குழுவினரை துரத்தித் துரத்தி மரண அடி அடிக்கிறான் தம்பி. தம்பி கொலை செய்வதில்லை ஆனால் கொலைக்கும் கோமாவுக்கும் உள்ள மயிரிழையில் தம்பியிடம் அடி வாங்கியவர்களின் உயிர் ஊசலாடுகிறது. இந்த மயிர் இழையில் தான் படமே நிற்கிறது.வன்முறைக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட வன்முறையைத் தம்பி கையில் எடுக்கிறான். "உதைக்கணும் உதைக்கணும் உதைப்பேன்" என்று முழிகளைப் புரட்டியவாறு ஒரு சைக்கோ மாதிரித் தம்பி அலையத் தம்பியின் சைக்கோவையும் தெருச் சண்டித்தனத்தையும் மாவீரம் என அர்த்தப்படுத்திக் கொள்ளும் அர்ச்சனா தம்பியை விரட்டி விரட்டிக் காதல் செய்கிறாள். தம்பிக்கு உலகைத் திருத்தும் வேலையிருப்பதால் அவன் அர்ச்சனாவின் திடீர்க் காதலை நிராகரிக்கிறான். என்றாலும், அர்ச்சனா விடாப்பிடியாக கனவில் தம்பியோடு இரண்டு காதற் பாடல்களை ஊரைச் சுற்றி மரத்தைச் சுற்றி பாடிவிடுகிறாள்.இடையில் தம்பிக்கு மதியுரைஞராக வந்து வாய்க்கிறார் மணிவண்ணன். பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை இடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களை அடக்கிய தம்பியின் தீரச் செயல்களுக்குப் புரட்சிகர தத்துவார்த்தரீதியான விளக்கங்களை மதியுரைஞர் வழங்குகிறார். "நான் ஏன் தெருச்சண்டியன் ஆனேன்?" என்று பல்கலைக் கழகப் பரிசளிப்பு விழா மேடையில் தம்பி உருக்கமாக உரை நிகழ்த்துகிறான். அப்போது மேடையில் இருக்கும் செட் ப்ரொப்பர்டிகள் பின் வருமாறு :மூன்று நாற்காலிகள், ஒரு மேசை, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி, ஒரு மைக் ஸ்ராண்ட், பாவலர் அறிவுமதி, ஒரு மின்விசிறி.மீண்டும் தோன்றும் மதியுரைஞர் தம்பியிடம் கார்ல் மார்க்ஸ், சே குவேரா, பிரபாகரன் எல்லோரும் கல்யாணம் செய்ததால் தம்பியும் அர்ச்சனாவை காதலிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். உடனே தம்பி அர்ச்சனாவின் காதலை ஏற்றுக்கொள்ள அர்ச்சனா தம்பியின் காலில் தடாலென விழுந்து கும்பிடுகிறாள். கடைசி நேரக் கலவரத்தில் பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைச் சீமானின் தம்பி ஆபத்திலிருந்து காப்பாற்றுவதோடு பாண்டியனுக்கு அறிவுரையும் சொல்கிறான். மனம் திருந்திய பாண்டியன் சீமானின் தம்பியைத் தனது குலசாமியாக ஏற்றுக்கொள்கிறான் இது தெரியாத பாண்டியனின் தம்பி சீமானின் தம்பியை வெட்டி விடுகிறான். தம்பி குற்றுயிராக ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்க தம்பியின் காதலியும் நண்பர்களும் சோகத்துடன் நிற்கிறார்கள். இவர்களை விடப் படு சோகத்துடன் வில்லனும் வெட்டியவனும் கண்களைக் கசக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.அப்போது அங்கே தோன்றும் மதியுரைஞர் தம்பியின் காதுகளுக்குள் "தம்பி எழுந்திரு! இன்னமும் பஸ்ஸில் இடித்தபடியே தான் பயணம் செய்கிறார்கள் எழுந்திரு ! நமக்கு இன்னமும் வேலையிருக்கிறது" என்று கூறத் "தம்பி பொழைச்சிட்டான் "...............மேலேயுள்ளது தம்பி திரைப்படத்தின் கதைச் சுருக்கம் என்று நினைத்துவிடாதீர்கள். தம்பி திரைப்படத்தின் முழுக்கதையும் இதைவிடச் சுருங்கியது, நான் தான் வாசிப்புச் சுவாரசியத்துக்காகக் கதையைச் சற்றே மினுக்கி எழுதியுள்ளேன்.தறுதலை தம்பிக்கும் தாதா பாண்டியனுக்கும் இடையில் நடக்கும் நாய்ச் சண்டையில் தமிழீழ மக்களின் போராட்டம் எங்கே வருகிறது ?காதலை ஏற்றுக்கொண்டவுடன் தம்பியின் கால்களில் காதலி விழுந்து தொழும் அசிங்கமான திரைப்படத்தில் ஈரோட்டுச் சிங்கத்துக்கு என்ன வேலை ?இந்த வெங்காயச் சினிமாவை வீரமணி, கொளத்தூர்மணிக்குக் கூட அர்ப்பணிக்க முடியாதே ? இதை எந்தத் துணிச்சலில் சீமான் பெரியாருக்கு அர்ப்பணிக்கிறார் ?"தமிழ்த் திரைப்படங்களை குறித்துப் பேசுவது சிரங்கைச் சொறிந்து கொடுப்பதைப் போன்றது" எனப் பேராசிரியர் சிவசேகரம் ஒருமுறை எழுதியதாக நினைவு. பேராசிரியர் விரக்தியின் விளிம்பில் நின்று இதை எழுதியிருந்தாலும் கூட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நேர்மறைப் பண்புகளும் இல்லாமல் இல்லை. திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்களும் 'பாதை தெரியுது பார்', 'ஏழாவது மனிதன்', 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' போன்று மாற்றுத் திரைப்படங்களைக் கண்டடைவதற்கான எத்தனங்களுக்குள்ளால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவை.இது தவிர வணிக நோக்கில் தயாரிக்கப்படும் சனரஞ்சக மனோரதியத் திரைப்படங்களுக்கும் பரந்துபட்ட தமிழ்ப் பார்வையாளர்கள் திரளுக்குமிடையே உள்ள உறவுடன் ரசிக உளவியலும் குறித்த ஒரு உரையாடலை 'நிறப்பிரிகை' சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தது. எனினும் அவை குறித்த சிந்தனை வளர்ச்சியும் ஆய்வு முயற்சிகளும், தமிழில் தொடராமலேயே போய்விட்டன. பாடல்கள், நடனங்கள், சண்டைக் காட்சிகள், மிகை உணர்சிகள், போன்ற கேளிக்கைக்கான நேர்மறைக் கூறுகளுடன் நடிகைகளைப் பாலியல் பிரதிமைகளாகக் கட்டமைப்பது, ஆதிக்க சாதிச் சாய்வு,மூடநம்பிக்கைகள், ஆண் மையவாதச் சிந்தனை முறைமை போன்ற எதிர்மறைக் கூறுகளும் சேர்ந்ததாகவே தமிழ்ச் சினிமாவின் பரப்பு இயங்கி வருகிறது. இந்தப் போக்கு தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகச் சினிமாவிலும் தொழிற்படும் ஒரு போக்குத்தான். ஆனால் தமிழ்த் திரைப்படத் துறையில் மாபெரும் வணிக வெற்றிகளை சாதித்த இயக்குனர்கள் தமது திரைப்படங்களுக்கு வெளியே புரட்சிகரமான வாய்ச் சொற்களை உதிர்ப்பதில்லை. 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் வெற்றியைக் கத்தாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கங்கை அமரன் சொன்னதில்லை. 'கப்டன் பிரபாகரன்' படத்தின் வெற்றியை ஈழப்போராளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று செல்வமணி சொன்னதில்லை. 'வைஜந்தி அய்.பி.எஸ்' திரைப்படத்தை ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அர்ப்பணிப்பதாக அத் திரைப்படத்தின் இயக்குனர் சொன்னதில்லை, ஆனால் மேற்சொன்ன படங்களையே கருத்துத் தளத்தில் ஒத்ததாக உள்ள தம்பி திரைப்படத்தின் வெற்றியைப் பெரியாருக்கும், பிரபாகரனுக்கும், அர்ப்பணிக்கிறேன் என்று கூறும் சீமானின் வாய்த் துடுக்குக்குப் பின்னால் இருப்பது எது ?தம்பி திரைப்படத்துக்கு புறத்தே இயக்குனர் சீமான் கட்டமைத்த கட்டமைக்கும் போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே/ அவர் உதிர்த்தும் கைப்புள்ள, வெடிமுத்து வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது ? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன ? இந்தக் கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு முன்னதாக தம்பி படத்தின் திரைக்கதை வசனத்தைப் பற்றியும் அவற்றுள் பொதிந்திருக்கும் ஆபத்தான சாதிய ஆண்மையவாத அராஐகக் கூறுகளைப் பற்றியும் பார்த்து விடுவோம்.தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்பட பாணியிலிருந்து வேறுபட்டது அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் 'உண்மை' இதழும் எழுதுகிறது தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் 'தென் செய்தி' இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது ?எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 130 படங்களில் இந்த கதை தானே நடந்தது ! எழுந்தமானமான எடுத்துக்காட்டாய் கஜேந்திரா பிலிம்ஸின் 'நாளை நமதே" திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம் அன்பே உருவான தாய், அறிவே உருவான தந்தை, சங்கர், விஜே, கண்ணன் என மூன்று குழந்தைகள்! தென்றல் நடைபயின்ற குடும்பத்தில் தீடீரெனப் புகுந்தான் கொள்ளைக்காரன் ரஞ்சித். தென்றல்கள் ஒவ்வொன்றும திசைக்கு ஒன்றாகப் பிரிந்தன. முடிவு என்ன? எம்.ஜி.ஆர் பெரியவனாக வளரவில்லையா? தன் குடும்பத்தையே நாசமாக்கிய நம்பியாரைக் கண்டு பிடிக்கவில்லையா? நம்பியாரைத் தண்டவாளத்தில் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தி நீதி மொழிகள் பேசவில்லையா நம்பியாரைப் பழிவாங்க எல்லா வாய்ப்புகள் இருந்தும் இறுதியில் எம்.ஜி.ஆர் நம்பியாரின் உயிரைக் காப்பாற்றி சட்டத்தின் கையில் ஒப்புவிக்கவில்லையா? அப்போது நாகேஷ் போலீசாரை ஜீப்பில் அழைத்துக்கொண்டு வரவில்லையா? எல்லாமே நடந்தன. ஒன்று மட்டும் தான் நடக்கவில்லை. இத் திரைப்படத்தின் வெற்றியை அண்ணாத்துரைக்கு அர்ப்பணிப்பதாக எம்.ஜி.ஆர் சொல்லவில்லை......!'தென்செய்தி' இதழில் சுப.வீரபாண்டியன் தம்பி திரைப்படத்தைக் குறித்து எழுதும் போது தம்பியின் வீட்டில் பெரியார், கார்ல் மார்க்ஸ், பாரதிதாசன் படங்கள் தொங்குவதாக மகிழ்ந்து போகிறார். இவையெல்லாம் தம்பியின் உள் வீட்டில் மாட்டியிருந்த படங்கள். ஆனால் தம்பியின் வீட்டின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் -அண்மைக் காட்சிக்குள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வரும் ஒரு புகைப்படம்- எப்படித்தான் பேராசிரின் கண்களுக்குப் படாமல் போனதோ தெரியவில்லை. அம் முகப்பு படத்தில் இருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மார்க்ஸின் மாணவர்கள், பெரியாரின் பேரர்கள், ஒரு போதும் முத்துராமலிங்கத்தின் படத்தைத் தூக்கிப்பிடிப்பதில்லை. தலித் மக்களின் தலைமைப் போராளி இம்மனுவேல் சேகரனின் படுகொலைக்கு நேரடிக் காரணியாக இருந்தவர் முத்துராமலிங்கம். முத்துராமலிங்கத்தை கைது செய்யுமாறு அப்போது பெரியார் குரல் கொடுத்தார். பின் அவர் கைது செய்யப்பட்டார். முத்துராமலிங்கத்துக்கு அடிப்படைவாத இந்துத்துவ முகமும் உண்டு. இந்து மகா சபைத் தலைவராகவும் முத்துராமலிங்கம் இருந்தார். "ஒரு வேளை இன்று முத்துராமலிங்கர் உயிருடன் இருந்திருந்தால் அவரே இன்றைய தமிழக இந்துத்துவ சக்திகளின் தலைவராக இருந்திருப்பாரோ என்று ஊகிக்கவும் இடமுண்டு" என்பார் அ.மார்க்ஸ் (அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் பக்.107) இன்று தென்மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலோத்தரின் சாதிப் பெருமிதப் படிமமாக வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டிவிட்டதற்க்குப் பின்னால் இருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன? இந்த இடத்தில் இயக்குனர் சீமான் திரைப்படத் துறையினுள் நுழைந்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.என் ஞாபகம் சரியாக இருந்தால் சீமான் பாரதிராஜாவின் 'பசும்பொன்' திரைப்படத்ததுக்குக் கதை உரையாடல் எழுதித்தான் திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். தமிழ்க் சினிமாவின் மொழியை மாற்றிப் போட்ட வகையிலும் 'கிழக்கே போகும் ரயில்', 'கருத்தம்மா', போன்ற சில படங்களில் சமூகப் பிரச்சனைகளைச் சற்றே ஆழமாகப் பேசியவர் என்ற வகையிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பாரதிராஜாவின் வகிபாகம் முதன்மையானதாக இருக்கிறது. இதற்கு அப்பால் சுயசாதிப் பெருமிதங்களைப் பேசும் படங்களை எடுத்ததோடு மட்டுமில்லாமல் சாதிச் சங்கத்தின் நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர் பாரதிராஜா.சீமான் கதை உரையாடல் எழுதிய பசும்பொன் திரைப்படமும் சுயசாதிப் பெருமைகளைப் பேசிய ஒரு வன்கொடுமைத் திரைப்படம் தான். இத் திரைப்படத்தின் நாயகப் பாத்திரமான துரைராசுத் தேவர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜி கணேசன் என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. அத் திரைப்படத்தில் தான் "தென்காசிச் சிங்கமே தேவர் அய்யா எங்கள் தேவர் குலத் தங்கமே தேவர் அய்யா" என்ற பாடல் வருகிறது. இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து என்பது கூடுதற் தகவல்."நமது மொழி சாதி காப்பாற்றும்" மொழி என்பார் பெரியார். நமது மொழியின் அடுக்குகளில் சாதி நுட்பமாகப் படிந்துள்ளது. சீமானின் தம்பி திரைப்படத்தில் பாத்திரங்கள் பிற பாத்திரங்களைத் திட்டும் போது 'சண்டாளா' எனத் திட்டுகிறார்கள். படம் நெடுகவும் இந்த சண்டாளா எனற சொற்ப் பிரயோகம் வருகிறது. சண்டாளர் என்பது புராணகள், இதிகாசங்கள் தோன்றிய காலங்களில் இருந்தே தலித்துக்களை இழித்துரைப்பதற்காக ஆதிக்கச் சாதியினர் பயன்படுத்தும் சொல். மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்த போது அடையாளமாகப் பறையர், பள்ளர், நாடார் சாதிகளிலிருந்து இரண்டிரண்டு பேர்களென ஆறு பேர்கள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். 'ஆறு சண்டாளர்கள்' என இவர்களைப் பற்றி 'பகிரதி' என்ற பார்ப்பனப் பெண் வசைப்பாடல் இயற்றிய கொடுமையைத் தமிழவேள் 'இம்மானுவேல் தேவேந்திரர் வரலாறு' என்ற நூலில் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு மேலாக சண்டாளர் என்பது இந்தியாவின் அட்டவணைச் சாதிகளுள் உள்ள ஒரு தீண்டப்படாத சாதியின் பெயர் என்பதும் அறிய வருகிறது. இச் சாதியின் பெயரை வசைச் சொல்லாகச் சீமான் தம்பி திரைப்படத்தில் உபயோகித்திருப்பதை திரைப்படத் தணிக்கைக் குழுவினர் எப்படி அனுமதித்தனர் ? தணிக்கைக் குழு அனுமதித்திருப்பினும் உண்மையும் தென்செய்தியும் சுபவீயும் கோவி.லெனினும் எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் ? சீமான் சார்ந்திருக்கும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் குஷ்புவிடம் இருந்து மட்டும் தான் தமிழைக் காப்பாற்றுமா ? சாதியிடமிருந்து தமிழைக் காப்பாற்றாதா ?பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திலும் "கதாநாயகி", கதைக்கு சம்மந்தமில்லாமல் வந்துபோன அறிவுமதி ஆண்டாள் பிரியதர்சினி போலவே அவளும் வந்து போகிறாள். சற்றுக் காலத்துக்கு முன்பு அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், பனியன் போன்ற உடைகளை அணியக் கூடாது என்ற ஒரு கலாச்சார அடிப்படைவாத விதி கொண்டுவரப்பட்டதே, அதை மாணவிகள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ சீமான் செம்மையாகக் கடைப்பிடிக்கிறார். படம் முழுவதும் கல்லூரி மாணவியான நாயகி சேலையிலேயே வருகிறாள். சீமானைப் போல மாதவனைப் போல அவளால் சே குவேரா படம் பொறித்த பனியன் அணிய முடியாது. விரும்பினால் சே குவேரா படத்தைச் சேலையில் பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டியது தான். புரட்சியாளனைக் காதலிக்கும் குற்றத்துக்காக அவள் புரட்சியாளனிடமிருந்து லூசு, இம்சை, பேய் போன்ற வசைகளைப் பெறுகிறாள். கடைசியில் சீமானின் தம்பி காதலை ஏற்றுக் கொண்டதும் அவனின் கால்களில் விழுகிறாள்.முற்று முழுதாக ஆணாதிக்கச் சிந்தனை வழியிலேயே சீமான் நாயகியின் பாத்திரத்தைக் கட்டமைத்திருக்கிறார். வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது: கே.பாலச்சந்தர் போன்ற பார்ப்பனப் பிற்போக்குவாதிகள் "அவள் ஒரு தொடர் கதை", "அவர்கள்", "மனதில் உறுதி வேண்டும்", "அச்சமில்லை அச்சமில்லை"," அக்னி சாட்சி",ஆகிய திரைப்படங்களில் அரைகுறையாகவேனும் சித்தரித்துக் காட்டிய பெண் ஆளுமைகளைக் கூட நமது பெரியாரின் பேரர்களாலும் தம்பியின் தம்பிகளாலும் உருவாக்க முடியாமல் உள்ளது.அவர்கள் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் காலில் விழும் கலாச்சாரத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.மாவோவின் மேற்க்கோளோடு தொடங்கி சே குவேரா வின் மேற்க்கோளோடு முடியும் இத் திரைப்படம் முழுவதும் சீமானின் தம்பி கிட்டத் தட்ட ஒரு போலிஸ் உளவாளி போலவே இயங்குகிறான். போலிசார் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சொல்லும் போது போலிஸ் வாகனத்துக்கு முன்னால் தம்பி பாதுகாப்பு அளித்துச் செல்கிறான். போலிசாரும் தம்பி சண்டித்தனம் செய்யும் போது கடைசிவரைக்கும் கண்டும் காணாமலேயே இருந்துவிடுகிறார்கள். வரலாற்றிலேயே இல்லாத புரட்சியாய் பொலிஸ் அதிகாரி (ராஜ்கபூர்)புரட்சியாளனை இரகசியமாகச் சந்தித்துப் சிலபல அய்டியாக்களும் கொடுக்கிறான். "புரட்சியாளன்" தம்பியும் போலிசும் கை கோர்த்துச் செயற்படுகிறார்கள். இவ்வாறாகப் போலிஸாருடன் கரங்களைக் கோர்ப்பவர்களை சனங்கள் புரட்சியாளன் என்று அழைப்பதில்லை, மாறாகப் "போலிஸ் உளவாளி" என்றுதான் காறியுமிழ்வார்கள். இந்தப் படத்துக்காக வீரப்பன் வேட்டை நிகழ்ந்த பகுதிகளிலும் நக்ஸல்பாரிப் புரட்சியாளர்கள் கொடூரமாகப் போலிசாரால் கொன்றொழிக்கப்பட்ட தருமபுரிக் கிராமங்களிலும் வாழும் இரத்த சாட்சியங்களான மக்கள் சீமானைச் செருப்பாலே அடித்தால் அது புரட்சி!சமூகத்தின் உண்மையான வன்முறையாளர்கள் சீமான் ஆனந்த விகடன் நேர்காணலில் கோபப்படுவது போல சாலையில் குப்பை எறியும் இளைஞர்களோ சாலை விதியை மீறும் எளிய மனிதர்களோ அல்ல. அல்லது சீமான் தம்பி திரைப்படத்தில் சித்தரிப்பது போன்ற பேருந்தில் உரசியபடியே பயணம் செய்யும் பாலியல் வறுமையில் உழல்பவர்களோ தெருச்சண்டியர்களோ அடியாட்களாக இயங்கும் விளிம்பு நிலை மனிதர்களோ அல்ல. அவர்கள் இந்த நிலப்பிரபுத்துவ முதலாளியக் கேடுகெட்ட சமூக அமைப்பின் விளைவுகள். சமூகத்தின் மிகப் பெரும் வன்முறை நிறுவனங்களாக அரசும் நீதிமன்றமும் காவல்துறையும் இராணுவமும், சிறைச்சாலைகளுமே விளங்குகின்றன.அவையே இந்த சமத்துவமற்ற சமூக ஒழுங்குகளையும் சுரண்டலையும் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. இவற்றின் வன்முறை குறித்துத் தம்பி திரைப்படம் பேசுவதில்லை. மாறாகத் தம்பி ஒரு இளைஞனுக்கு "நீயும் நானும் அடித்தால் குற்றம் போலிஸ் அடித்தால் சட்டம்" எனவே நீ படித்து போலிஸ்காரனாகு! கலக்டராகு! சமூகத்தைத் திருத்து" என்கிறான்.'தாகம்' பெப்ரவரி 2006 இதழில் சீமான் தனக்குள் இலட்சியங்களை விதைத்தவர்களான மாவோவும் லெனினும் சே குவேராவும் தம்பி திரைப்படம் முழுவதும் விரவியிருப்பதாகக் கூறுகிறார். மாவோவும் லெனினும் அரசு இயந்திரத்தை நொறுக்குவது குறித்தும் அரசின் காவல் நாய்களான அதிகாரிகளையும் ஆயுதப்படையினரையும் செயலிழக்கச் செய்வது குறித்தும்தான் பேசுவார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக மாறச் சொன்னார்களே ஒழிய பொலிஸ்காரர்களாக மாறச் சொல்லவில்லை. " நீதி என்பது அரசின் வன்முறை- வன்முறை என்பது மக்களின் நீதி" என்பதே சர்வதேசிய அனார்கிஸ்டுகளிள் முதல் முழக்கமாய்த் திகழ்கிறது. அரசுக் கட்டுமானம், நீதியின் வன்முறை, வெகுசனங்களின் கலகம் போன்ற நுண் அரசியற் சிந்தனைகள் சே குவேராவின் பனியனைப் போட்டுக்கொண்டு கோடம்பாக்கத்துத் தெருக்களில் சுற்றித் திரிவதாலோ அல்லது பிரபாகரனின் படத்தைச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அலைவதினாலோ சித்தித்துவிடப் போவதில்லை.இயக்குனர் சீமான் குத்துமதிப்பாய் மார்க்ஸிஸம் மாவோயிஸம் என அரைகுறையாய்ப் அனர்த்துவதை நிறுத்திக்கொண்டு, குறைந்தபட்சம் அவர் அவரின் இன்னொரு தோழரான தியாகு எழுதிய 'மார்க்சியம் ஆனா ஆவன்னா' என்ற நூலையாவது படிக்க வேண்டும். 'சொல்வது தெளிந்து சொல்லவேண்டும்.'லெனினையும் பெரியாரையும் பாரதிதாசனையும் புகைப்படங்களாகத் தமிழ்த் திரையில் முதலில் காட்டியவர் சீமான் என்ற சிந்தனையாளன் தான் என்று சிறுபிள்ளைத்தனமாக சுப.வீரபாண்டியன் மகிழ்ந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை. எம்.ஜி.ஆர் கூடத்தான் உலகம் சுற்றும் வாலிபனில் லெனின் சிலையை காண்பிக்கிறார்.பாரதிதாசனைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் புத்தரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் பேசாததையா சீமான் பேசிவிட்டார் ? எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைப்படத்தில் நாடோடி ஆட்சியில் அமர்ந்தவுடன் கொண்டு வரும் சட்டத் திருத்தங்களில் அரைவாசி கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பார்கள். வணிக இலக்குகளுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குள் இவ்வகையான போலிப் புரட்சிகரப் படிமங்களும் உணர்ச்சி முழக்கங்களும் எழுப்பப்படுவதற்க்கான நோக்கம் வியாபாரக் காரணங்களைத் தவிர வேறில்லை.தம்பி திரைப்படத்தைப் போலவே 1981 ல் போலிப் புரட்சிகர முழுக்கங்களுடன் ஏ.வி.எம் தயாரிப்பில் 'சிவப்பு மல்லி' என்றொரு திரைப்படம் விஐய்காந்த்,சந்திரசேகர் நடிப்பில் வெளிவந்தது. அத் திரைப்படத்தின் போலி முழக்கங்களுக்குப் பின்னால் இருந்த வணிக உத்திகளை அறந்தை நாராயணன் 'தமிழ் சினிமாவின் கதை' என்ற நூலில் விமர்சிக்கிறார். இந்த விமர்சனம் 'நாடோடி மன்னனுக்கும்' பொருந்தும், 'உலகம் சுற்றும் வாலிபனுக்கும்' பொருந்தும், 'அன்பே சிவத்துக்கும்' பொருந்தும், நம் சீமானின் தம்பிக்கும் பொருந்தும். கீழே வருவது அறந்தை நாரயணின் 'சிவப்பு மல்லி' குறித்த விமர்சனம்:1980 ல் ஏ.வி.எம் கூட்டத்திலிருந்து மெய்யப்பச் செட்டியாரின் மைந்தர்கள் 'முரட்டுக்காளை' என்றொரு பிரமாண்டமான பொழுதுபோக்குப் படத்தை வெளியிட்டனர். அது நடந்து கொணடிருந்த போது ஆந்திராவில் ஒரு தெலுங்குப் படம் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது. அந்தப் படம் 'எர்ரமல்லி'. ஆந்திர மாநிலக் கம்யுனிஸ்டுகள் உருவாக்கிய படம். சகோதரர்கள் அந்தப் படத்தைப் பார்த்தனர் சிக்கனமான செலவில் தயாரிக்கக் கூடிய 'ப்ருவ்ட் சப்ஐக்ட்' என்பதை உணர்ந்தனர். தேசமெங்கும் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியால் அமைதியின்மையும் வாழ்க்கை நெருக்கடியும்... அதனை எதிர்த்து விவசாயிகள் தொழிலாளிகள் இளைஞர்கள் மாணவர்கள் மத்தியதர வர்க்கத்தினர் அனைவரும் போராடிக் கொண்டிருக்கும் புறச் சூழ்நிலை. இதன் எதிரொலியாக அமிதாப்பச்சன் நடிக்கும் இந்தி மசாலாப் படங்களிலும் -ஏன் ரஜினிகாந்த் நடித்த தமிழ் 'காளி' படத்தி லும் - போராட்டக்கார இளைஞன் கம்யுனிஸ்டாகவும் கையில் செங்கொடி பிடிப்பவனாகவும் படங்களில் வரத் தொடங்கியிருந்தான். எர்ரமல்லி ப்ரூவ்ட் சப்ஜெக்டை ஏ.வி.எம் சகோதரர்கள் வாங்கினர். தமிழுக்கு தகுந்த மாதிரி திரைக்கதை எழுத வைத்து 'சிவப்பு மல்லி' என்ற படத்தை 1981 ல் வெளியிட்டனர். தமிழ்ப் படத்துக்கு வசனம் எழுதி இயக்கியவர் இராம.நாராயணன் . நிலப்பிரபுத்துவத்தையும் முதாலாளித்துவத்தையும் எதிர்த்து எழுந்த இரு கோபம் கொணட இளைஞர்களின் கதை. கடிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளிச் சுரண்டும் முதலாளி அவனுக்கு நல்லவளான ஒரு மனைவி கோமாளிகளான மூன்றுநிலப்பிரபுகள். நிலப்பிரபுவுக்கு ஒரு மகள்.... என்று தமிழில் (மாற்றப்பட்ட) திரைக்கதை. வண்ணத்தில் நூற்றுக்கணக்கான கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகள், ஊர்வலத்தில் லெனின் படம் கூடவே பெரியார், அண்ணாத்துரை படங்கள். கம்யுனிஸ்ட் கட்சிக் கொடிகளையும், சில வசனங்களையும் நீக்கி விட்டால் 'சிவப்பு மல்லி' - ஒரு எம்.ஜி.ஆர் பாணிப்படம்; அபாரமான வசூல். (தமிழ் சினிமாவின் கதை பக்:714)தம்பி திரைப்படத்திலும் இரு மேற்கோள்களையும் ஒரு வசனத்தையும் நீக்கி விட்டால் சீமானின் தம்பி அசலான விஜயக்காந் பாணிப்படம். இராம.நாராயணனுக்கு 'முரட்டுக்காளையை' தயாரித்த ஏ.வி.எம் நிறுவனமென்றால் சீமானுக்கு 'ஜீன்ஸ்' படத்தைத் தயாரித்த முரளி மனோகர். ஏ.வி.எம்மும் இராம.நாராயணனும் சேர்ந்து தமிழ்த் தொழிலாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்கள் என்றால்; முரளி மனோகரும் சீமானும் தமிழகத் தமிழர்களுடன் சேர்த்து ஈழத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைக்கிறார்கள்....இன்று புலம் பெயர்ந்த தேசங்களில் ஏறக்குறைய பத்து இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களே தமிழ்த் திரைப்படங்களின் வருவாயில் கணிசமான பகுதியைத் தீர்மானிப்பவர்களாக விளங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஈழத்தமிழர்களின் சினிமாக் கிறுக்கு மற்ற எந்த தேசிய இனத்தவர்களின் சினிமாக் கிறுக்கை விடவும் சற்றும் குறைந்ததல்ல. 'காதலுக்கு மரியாதை' 'ஆட்டோ கிராப்' போன்ற கிறுக்குத்தனமான திரைப்படங்களை புகலிடங்களில் பெரும் வெற்றியோடு ஓட வைத்தவர்கள் இவர்கள். பாரிஸ் நகரத்தில் இதுவரை திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிக காட்சிகள் ஓடிய திரைப்படம் 'கப்டன் பிரபாகரன்'. அந்தப் பெயருக்காகவே அத் திரைப்படம் ஓட்டமாக ஓடியது. இதே வணிக உத்தியோடு இப்போது சீமானின் தம்பி திரைப்படமும் புகலிட தேசங்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.தமிழீழ விடுதலைப் போராளிகளின் தலைமைகள் மீதும் அவர்களின் குறுந் தேசியவாதப் பண்புகளின் மீதும் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன என்பதற்காகச் சிங்களப் பேரினவாத அரசுகளின் இன அழிப்புக் கொடுமைகளையும் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க்கான நியாயமான காரணிகளையும் போராட்டத்தில் ஏராளமான மக்களும் அடிமட்டப் போராளிகளும் செய்த வீரஞ் செறிந்த தியாகங்களையும் நாம் மறந்து விடப் போவதில்லை. ஈழப் போராட்டத்துக்கு தமிழகத் தோழர்கள் செய்த பங்களிப்புகளும் அளப்பெரியன. அத் தோழர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக தீயில் எரிந்தார்கள். மாணவர்களும் இளைஞர்களுமாகத் திரண்டு ஈழ அகதிகளுக்குப் பெரும் உதவிகளைச் செய்தார்கள். பல தோழர்கள் ஈழப் போராட்டத்தின் நியாயங்களைப் பரப்புரை செய்வதையே தமது வாழ்நாள்ப் பணியாகக் கொண்டார்கள். பயிற்சி முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்று ஈழத்தில் களப் போராளிகளாகவும் சில தமிழகத் தோழர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஈழப் போராட்டத்துக்கு பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்ததால் எண்ணுகணக்கற்ற தோழர்கள் சிறைக் கொட்டடிகளில் ஆண்டு கணக்காக அடைக்கப்பட்டார்கள். வாக்கு, மனம், காயம் எனச் சகலத்தையும் தமிழ்ப் போராட்டத்துக்கு ஒப்படைத்த சில தோழர்கள் சகோதரப் படுகொலைகளைத் தொடர்ந்து விரக்தியடைந்து தோழர் பாவரசுவைப் போல மனநோயாளிகளாக மாறிக் காணாமலேயே போய்விட்டார்கள். ஆக இவை எல்லாம் சேர்ந்தது தான் ஈழப்போராட்டத்தின் வரலாறு.இன்று ஈழ விடுதலைப் போரட்டம் குறுந் தேசிய வெறியாலும் கலாச்சார அடிப்படைவாதத்தாலும் ஏகாதிபத்திய அடிபணிவாலும் பாஸிஸத்தாலும் திசை தவறிப் போயிருக்கலாம் . ஆனால் ஈழப் போராட்டத்தின் தோற்றுவாய்க் காரணங்களாய் அமைந்த இன ஒடுக்குமுறைக் காரணிகள் அப்படியே தான் இருக்கின்றன. அரசியல், இராணுவ முட்டுச் சந்துகளில் அகப்பட்டிருக்கும் ஈ ழவிடுதலைப் போராட்டத்தைச் சனநாயகப் படுத்துவதும் பாஸிஸத்தைத் தோற்கடிப்பதுவுமே ஈழப் போராட்டத்தை அடுத்த படியை நோக்கி நகர்த்தும் வழியாக இருக்கும். இத்திசை நோக்கி நகர்வதே சமூகப் போராளிகளின் அக்கறையாக இருக்கும். ஆனால் தமிழீழ விடுதலையின் ஆதரவாளராகச் சொல்லப்படும் திரைப்பட வியாபாரி சீமானுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. அவர் பிரபாகரன் எனற தனிமனிதனையே ஈழப்போராட்டமாக உருவகித்து பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் பேட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். புறநானூற்றின் நிகழ்காலம பிரபாகரன் என்று அவர் தனிமனிதத் துதியைப் பாடிக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் ஆதரவு, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், பெரியார், அம்பேத்கர் என்று சொற்க் குவியல்களை உதிர்ப்பதின் மூலம் அவர் ஊடகங்களில் - குறிப்பாகப் புலம்பெயர் ஊடகங்களில் - தன்னை எப்போதும் தக்க வைத்துக் கொள்கிறார். இதனூடாக அவர் தனது வணிக வலையைக் கவனமாகப் பின்னுகிறார்.சீமானின் வணிகப் புத்தி மிகவும் வெளிப்படையானது. தம்பி திரைப்படத்தில் நடிப்பதற்கு மாதவனைத் தவிர எந்த நடிகர்களும் தயாராக இருக்கவில்லை என்று அவர் வியாபார மதிப்புள்ள உச்ச நட்சத்திரங்களைக் குறித்துப் புலம்புகிறார். 'பாதை தெரியுது பார்' இயக்குனர் நிமாய்கோசும் 'ஏழாவது மனிதன்' இயக்குனர் ஹரிகரனும் 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' இயக்குனர் சிறீதர் ராஜனும் உச்ச நட்சத்திரங்களின் தேதிகளுக்காகச் சீமானைப் போல புலம்பவில்லை. அவர்கள் புது முகங்களையும் வணிக மதிப்பற்ற நடிகர்களையும் வைத்தே காலத்தால் அழியாத திரைப்படங்களை உருவாக்கிக் காட்டினார்கள். ஆனால் சீமானோ சே குவேரா பனியனை அணிந்து நடிக்க மாதவனைத் தவிர எந்தத் தமிழ் நடிகனுக்கும் துணிவில்லை எனறு பழித்துப் பேசிய அதே நாவால்தான் தனது அடுத்த படத்தில் விஜய் அல்லது விக்ரம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஆனந்த விகடன் ஊடாக உச்ச நட்சத்திரங்களிடம் மனுக் கொடுக்கிறார்.அம்ஸ்ரர்டாமில் கஞ்சா விற்கும் கோப்பிக் கடைகளின் முகப்பில் பொப் மார்லியின் உருவத்தை வணிக இலச்சினையாகப் பொறித்திருப்பார்கள். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பனியன்களில் சே குவேராவின் உருவத்தை அச்சிட்டுச் சந்தைப்படுத்துவார்கள். அதே போல் இயக்குனர்சீமானுக்குத் தனது திரைப்படத்தைச் சந்தைப்படுத்த பிரபாகரன் ஒரு வியாபார இலச்சினை.ஈழப் பிரச்சினை அவருக்கு ஒரு 'ப்ரூவ்ட் சப்ஜெக்ட்'.இலங்கையில் நடைபெறும் யுத்தத்தால் ஆதாயம் அடைபவர்கள் பலர். ஆயுத வியாபாரிகள், அரசுத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் ஒரு புறம் யுத்தத்தின் பெயரால் நிதியைச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் தமிழ்த் தேசியத்தை முழக்கமிடும் பத்திரிகைகள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், அறிவு ஜீவிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் திட்டமிடலாளர்கள், தமிழ்த் தேசியத்தின் வெளிநாட்டு முகவர்கள், கோயில் முதலாளிகள் போன்றவர்களும் ஈழப் போரட்டத்தின் பெயரால் பெரும் பொருளியல் ஆதாயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இயக்குனர் சீமானும் தன் பங்குக்கு வாய் நனைக்க வந்துள்ளார். ஆற்றிலே போற வெள்ளம் அண்ணே குடி!தம்பி குடி!!ஷோபாசக்தி25.03.2006
Abonnieren
Posts (Atom)